யாருப்பா அந்த கண்டிராக்டர்? இவ்ளோ பெரிய ஜீப் கூடவா கண்ணுக்கு தெரியாது! வலை போட்டு தேடும் வேலூர்!
வேலூர் : வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது ஏற்கனவே டூவீலரோடு சிமெண்ட் சாலை போட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்குள்ளாகி சர்ச்சையான நிலையில், தற்போது பெரிய ஜீப்போடு சேர்த்து சாலை போட்டுள்ளதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Recommended Video
சமூக வலைதளங்கள், செல்போன் கேமராக்கள் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ஐ வில் பி வாட்சிங்! என்பது போல், யாரும் யாரிடமும் தப்பித்து விட முடியாது. அந்த அளவுக்கு நம்மை ஆயிரம் கண்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
குற்ற செயல்களில் இருந்து குதூகலம் வரவழைக்கும் உற்சாக வீடியோக்கள் வரை சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் பதிவாகி, வெளியாகி மக்களிடம் வரவேற்புகளையும் கண்டனங்களையும் பெற்று வருகிறது.

வேலூர் சர்ச்சை
அந்த வகையில் வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் வைரலாகி பலத்த விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது வேறு ஒன்றும் இல்லை வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் போது அமைக்கப்பட்ட சாலை விவகாரம் தான் அது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மெயின் ரோடு காளிகாம்பாள் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

சிமெண்ட் சாலை
அப்போது காளிகாம்பாள் தெருவை சேர்ந்த சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார் காலையில் வந்து பார்த்தபோது புத்தம் புதியதாக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது அது கூட பரவாயில்லை அவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவுக்கு சாலை போட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போன சிவா எவ்வளவோ முயன்றும் வாகனத்தை எடுக்க முடியவில்லை. பின்னர் அந்த ரோட்டை உடைத்து வண்டியை மீட்டார்.

மேலும் ஒரு சம்பவம்
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு உன்னிப்பாக வேலை பார்த்த வேலைக்காரர்களையும் ஒப்பந்ததாரரையும் நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்தனர் இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் வேறு எங்கும் இல்லை அதே வேலூரில் தான். வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலரை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்ட் ரோடு போட்டது அடங்குவதற்குள்ளாக இந்த சம்பவம் நடந்திருக்கிருக்கிறது.

ஜீப்போடு தார்சாலை
அதே வேலூரில் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்கள் புகாரளிக்கவே, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார். அதையடுத்து, சாலை சீர் செய்யப்பட்டது. தற்போது இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications