தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு.. 16ம் தேதி டாக்டர்கள் ‘சத்தியாகிரக’ப் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தேசிய மருத்துவ ஆணையம் உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16ம் தேதி மருத்துவர்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தங்களின் இந்தப் போராட்டத்திற்கு மருத்துவ மாணவர்களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இந்த ஆணையம் உருவானால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தாங்களே கல்விக் கட்டணத்தை 90 சதவீதம் நிர்ணயிக்க முடியும் என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பாதிக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications