மதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் போதையில் நடனம் ஆடியதாக சென்னையை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் ஆரோவில் அருகே முந்திரி தோப்பு உள்ளது. இங்கு பொதுவாக ஆண்கள் மது அருந்த வருவது வழக்கம். ஈசிஆர் சாலையில் இருப்பதால் இங்கு இளைஞர்கள் வட்டம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து 15 ஆண்கள், 8 பெண்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரி தோப்புக்கு நேற்ரு வந்திருந்தனர். அவர்கள் 23 பேரும் மது அருந்தினர்.
பின்னர் நிதானம் தெரியாமல் ஆபாச நடனம் ஆடி கொண்டிருந்தனர். இதனால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் அப்பகுதி மக்கள் இடையூறை சந்தித்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு போதையில் ஆடிக் கொண்டிருந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். போலீஸாரை கண்டதும் அங்கிருந்த 8 பெண்களும் ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அந்த 15 பேரை போலீஸார் கைது செய்து அங்கிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மது விருந்து, போதையில் நடனம் என ஆங்காங்கே நடைபெறும் இந்த கலாச்சார சீரழிவுகளால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications