விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரம் மாநாடு.. அது நடக்கலாம்.. அதிமுகவின் கனவு நிறைவேறப் போகிறது!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிமுகவின கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை ஆளும் அதிமுக முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல் எதிர்தரப்பான திமுகவும் தீவிரமாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, புதிய நீதிகட்சி, முக்குலத்தோர் பூலிப்படை, தமாகா, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டெல்டா தொகுதிகள் பங்கீடு.. சைலண்ட்டாக தள்ளிவிட்ட அதிமுக.. உள்ளூர 'குமுறும்' கூட்டணி கட்சிகள்டெல்டா தொகுதிகள் பங்கீடு.. சைலண்ட்டாக தள்ளிவிட்ட அதிமுக.. உள்ளூர 'குமுறும்' கூட்டணி கட்சிகள்

தனித்து போட்டி

தனித்து போட்டி

திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்றதால், திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.. அதிமுக கடந்த முறை தனித்துநின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதால் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

ஆனால் இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓரளவு தொகுதிகளை விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாநாடு

விழுப்புரம் மாநாடு

இந்நிலையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. அந்த கனவு விழுப்புரம் மாநாட்டில் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிமுகவின கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா பங்கேற்கிறார்

அமித்ஷா பங்கேற்கிறார்

விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டிற்கான பூமி பூஜையும் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக சொல்கிறார்கள்.

23 வருடத்திற்கு பின்

23 வருடத்திற்கு பின்

முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1,2,3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றது. அதன்பின்னர் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடத்தப்படாத நிலையில், வருகிற 28-ம் தேதி மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுகிறது.

English summary
As the assembly elections approach, it has been reported that the AIADMK state conference will be held in the 28th Villupuram district. It is said that all the leaders of the AIADMK alliance party will present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X