திராவிட மாடல்..புரியலையே? எம்ஜிஆர், ஜெயலலிதா மாடல்தான் பெஸ்ட் - போட்டு தாக்கும் சசிகலா
கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. 600க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன என்று சசிகலா கூறியுள்ளார்
விழுப்புரம்: திராவிட மாடல் என்றால் என்ன என்றே ஒன்றும் புரியவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் சமத்துவக்காகப் பாடுபட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த மாடல் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக தலைமையை நான் ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நான் செயல்பட்டு வருகிறேன். அதிமுக இப்படி இருப்பதால் திமுகதான் பயனடைகிறது.
அதிமுக ஒன்றாக இணைவதை திமுகவினர் யாருமே விரும்பமாட்டார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும் என்றுதான் திமுகவினர் நினைக்கிறார்கள். 38 ஆண்டு கால அனுபவம் கொண்ட நான், விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன்.

கட்சியை பலவீனப்படுத்துவதா?
அதிமுகவின் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறிய சசிகலா, அப்படி சொல்பவர்கள் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள் என்றார். அதிமுகவை காப்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமே தவிர, இருப்பவர்களை விரட்டி அடித்து கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது.

அதிமுக செயற்குழு
சென்னை வானகரத்தில் நடக்கவிருப்பது உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெண்கள் சேர்ந்து அப்போது கட்சியை மீட்டெடுத்து முன்னேற்றினோம். அதேபோல விரைவில் இப்போதுள்ள பிரச்னையையும் சரி செய்து, என் தலைமையின் கீழ் அதிமுகவை கொண்டு வருவேன் என்று சசிகலா தெரிவித்தார்.

திராவிட மாடல்
திமுகவினர் திராவிட மாடல் என்று பேசி வருகிறார்கள். எனக்கு தற்போது வரை திராவிட மாடல் என்றால் என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. ஏழை, எளிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினர். சமத்துவக்காகப் பாடுபட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த மாடல்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. 600க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. குறிப்பாக சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடக்கின்றன. சென்னை பெருநகர ஆணையர் அலுவலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதுதான் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்றும் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications