பெரும்பான்மை ஆளவேண்டும், சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
விழுப்புரம்: பெரும்பான்மையினர் ஆள வேண்டும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தவறான ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதற்கு எதிராக நீதிமன்றத்தில் நிச்சயம் தடை பெறுவோம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்,
Recommended Video
விழுப்புரத்தில் பாமக சார்பில் விழுப்புரம், திருக்கோயிலூர், விக்கிரவாண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்:
கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ், தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 91 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட வன்னியர் இல்லை எனவும் 150 இயக்குனர் பணியிடங்களில் 5 பேர் மட்டுமே வன்னியர்கள் உள்ளனர் எனக் கூறினார்.

பெரும்பான்மை ஆள வேண்டும்
எப்போதும் பெரும்பான்மை ஆளவேண்டும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தான் 42 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் எனவும், ஆனால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களின் ஒருவர் கூட வன்னியர் இல்லை இந்த சமுதாயத்தை அழிக்க நினைப்பவர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தவுடன் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் எனவும், அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தோம் என்றார்.

வன்னியர்கள் என் பேச்சை கேட்க வேண்டும்
தேர்தலுக்கு முன்பாக நாம் இருந்த கூட்டணியில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டில் கைவைக்க முடியாது என கூறி விட்டாதால் அப்போது நான் கூட்டணி இல்லை என மறுத்துவிட்டேன், அதன் பின்னரே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது என்ற மருத்துவர் ராமதாஸ், கடந்த ஆட்சியின்போது தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர் பணியிடங்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை, 12 தேர்வானைய பணியிடங்கள் காலியாக இருந்தது நான் கெஞ்சி கேட்டும் அதில் ஒருவரைக்கூட வன்னியர் நியமிக்கப்படவில்லை தற்போதுள்ள ஸ்டாலின் அரசு ஒருவரை உறுப்பினராக நியமித்துள்ளது என்ரும், வட மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய மக்கள் என் பின்னால் வந்து என் பேச்சைக் கேட்டால் அனைத்தும் தலைகீழாக மாறும் எனக் கூறினார்.

ஆள அன்புமணி பொருத்தமானவர்
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் 436 அறிக்கைகளை விடுத்துள்ளேன் எந்த கட்சி தலைவர் இப்படி அறிக்கை விட்டார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இனிவரும் காலம் பாமகவின் காலம் எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன் எனவும், என் இறுதி மூச்சு வரை இந்த மக்களுக்காக பாடுபடுவேன், ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் தமிழ்நாட்டை வன்னியரில் ஒருவர் ஆள வேண்டும் என்றும், அதற்குப் பொருத்தமானவர் அன்புமணி ராமதாஸ் எனக் கூறினார்.

இடஒதுக்கீடு மீண்டும் பெறப்படும்
இனிமேல் காசுக்கு வன்னியர்கள் மயங்க கூடாது எனவும், குறிப்பாக பொறுப்பாளர்கள் மயங்கக்கூடாது நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தலில் பாமக போட்டியிட உள்ளது வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாமகவுக்கு விழ வேண்டும் எனக்கூறிய மருத்துவர் ராமதாஸ், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தவறான ஒரு தீர்ப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம் எனவும் நிச்சயம் 10.5 இட ஒதுக்கீட்டைப் நாம் பெற்றே தீருவோம் என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications