2024ல் ப்ளான் பண்ணுவோம்..2026ல் பாமக ஆட்சி அமைக்கும்! உறுதி சொல்லும் அன்புமணி! பாஜகவுக்கு வார்னிங்!
விழுப்புரம் : மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது. ஆபத்தானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள், முன்னோடிகளுடன் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி இராமதாஸுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம் கல்வி வளர்ச்சியில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்று ஆனால் டாஸ்மாக் விற்பனையில் தமிழகத்தில் விழுப்புரம் முதல் இடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். தென்பெண்ணையாற்றில் ஆண்டிற்கு 30டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. தடுப்பனைகள் அமைக்க வேண்டும்.

ஹிந்தி திணிப்பு
நந்தன் கால்வாய் திட்ட ம் கிடப்பில் போடப்பட்டுள்ளது உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும். முலாயம்சிங் யாதவ் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது. ஆபத்தானது.

கடுமையாக எதிர்ப்போம்
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும். தற்போது பிஜேபி ஆட்சியில் ஹிந்தியை திணித்து வருகிறார்கள். இணைப்பு மொழி ஆங்கிலத்தை எடுத்துவிட்டு ஹிந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனை கடுமையாக எதிர்ப்போம். இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தால், குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கட்டாயம் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று திணித்தால், கடுமையாக எதிர்ப்போம்.

பாமக ஆட்சி
எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக வியூங்களை 2024 இல் வகுக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications