Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்காக சேர்த்த ரூ 10.50 லட்சத்தில்.. நல்லாவூருக்கு சாலை அமைத்த இளைஞர்.. அதுதான் மனசு!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திருமணத்திற்காக சேமித்து வைத்த ரூ 10 லட்சத்தை தனது கிராமத்திற்கு சிமென்ட் சாலை அமைக்க இளைஞர் ஒருவர் செலவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திருமணத்திற்காக சேர்த்த ரூ 10.50 லட்சத்தில்.. நல்லாவூருக்கு சாலை அமைத்த இளைஞர்.. அதுதான் மனசு!

    விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் - லட்சுமி தம்பதி. இவர்களது இளைய மகன் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு விதியின் படி சந்திரசேகர் தன் கிராமத்திற்கு வந்து வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார்.

     நல்லாவூர் கிராமம்

    நல்லாவூர் கிராமம்

    இந்நிலையில் நல்லாவூர் கிராமத்தில் எப்போது மழை பெய்தாலும் சேரும் சகதியுமாகவே அந்த கிராமத்து சாலைகள் மோசமாக இருந்தன. குழந்தைகள் விளையாடுவதற்கு கூட
    இடமில்லாமல் தவித்து வந்தனர். பிறந்து வளர்ந்த ஊரில் அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததை எண்ணி
    சந்திரசேகர் கவலையடைந்தார்.

     வட்டார வளர்ச்சி அலுவலகம்

    வட்டார வளர்ச்சி அலுவலகம்

    இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு
    சென்று தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார். இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது எதுவும் நிதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து இந்த சாலைக்கு எவ்வளவு
    செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.

     ரூ 10 லட்சம்

    ரூ 10 லட்சம்

    அதற்கு அதிகாரிகள் ரூ 10 லட்சம் ஆகும் என தெரிவித்துள்ளனர். உடனே அந்த நிதியை நான் செலவு செய்து சாலை அமைத்து கொள்கிறேன் என சந்திரசேகர் கூறியுள்ளார். இதற்கு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெறுங்கள் என கூறியுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

    சந்திரசேகரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் சொந்த செலவில் சாலையை அமைக்க அனுமதி கேட்டார். மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்த நிலையில் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமென்ட் சாலையை ரூ 10.50 லட்சம் செலவில் சந்திரசேகரன் அமைத்துள்ளார்.

     செப்டம்பர் மாதம்

    செப்டம்பர் மாதம்

    இவருக்கு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி சந்திரசேகரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
    கடந்த இரு ஆண்டுகளாக தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தைதான் சந்திரசேகரன் சாலை அமைக்க பயன்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சந்திரசேகரனின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+