எல்லோரும் விலகி இருக்க சொன்னா.. ஸ்டாலின் ஒன்றிணைய சொல்றாரே.. ராஜேந்திர பாலாஜியின் நக்கல்

முக ஸ்டாலினை விமர்சித்து பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "எல்லாரும் விலகி இருக்க சொன்னால், ஸ்டாலின் மட்டும் "ஒன்றிணைவோம் வா" என்று அழைத்து அரசியல் செய்து வருகிறாரே" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது
2 நாளைக்கு முன்பு ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என்ற கேள்விக்கு, புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வது போல் பிரச்சனை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றார்.. அமைச்சரின் இந்த பதில் சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக வலம் வந்தபடி உள்ளது. இப்போது மீண்டும் ஒரு கருத்தை சொல்ல, அது மீம்ஸ்களை போடும் அளவுக்கு வந்துவிட்டது!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்ச்சகர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது: "விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... மீதி பேர் எல்லாரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

coronavirus: minister rajendra balaji slams mk stalin

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம் முதல்வர் உத்தரவுப்படி ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் உதவி செய்து வருகிறார்கள்.. எல்லா அர்ச்சகர்களுமே வசதியாக இருப்பவர்கள் கிடையாது.. ஏழை எளிய அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனாவைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட எல்லா வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என்று சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.. ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் "ஒன்றிணைவோம் வா" என்று எல்லாரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.

Recommended Video

    பி.கே. Vs எடப்பாடி... கொரோனாவுக்கு நடுவிலும் முட்டி மோதும் கட்சிகள்

    வேண்டுமானால் ஸ்டாலின் அவர்கள், உண்மையான குறைகள் ஏதாவது இருந்தால் சுட்டி காட்டலாம். ஆனால் அதையெல்லாம் சொல்லாமல், குறைகளை மட்டுமே தேடிதேடி கண்டுபிடித்து சொல்லி வருகிறார்.. அதனால் ஸ்டாலின் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை"என்றார். ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் பற்றி சொன்ன இந்த வரிகளை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விட ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+