நாயகன் உதயம்.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் கட்சி தலைவராகும் இந்திய வம்சாவளி? யார் இந்த ஹக்கீம் ஜெப்ரிஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் ஜோபைடனின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஜோபைடனின் ஜனநாயக கட்சியை வழிநடத்தும் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹக்கீம் ஜெப்ரிஸ் என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை போல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருஅவைகள் உள்ளன. அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை கீழ்சபை எனவும், செனட் சபை மேல்சபை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
இதில் செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகவும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகவும் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல்
இதில் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்களும், மேல் சபையான செனட் சபையில் 105 இடங்களும் உள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்தது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெற உள்ளதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சி இடையே போட்டி நிலவியது.

டொனால்ட் ட்ரம்ப் கட்சி வெற்றி
இதில் செனட் சபையை ஜோபைடனின் ஜனநாயக கட்சி கைபற்றியது. இருப்பினும் 435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையை பொறுத்தமட்டில் 218 உறுப்பினர்களை பெற்று டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்றது. ஜோபைடனின் ஜனநாயக கட்சி 212 இடங்களை பிடித்து பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையை இழந்தது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது 8 இடங்களை பிரதிநிதிகள் சபையில் ஜோபைடனின் கட்சி பெற்றுள்ளது. பிரதிநிதிகளின் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பது என்பது அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஜோபைடனின் அதிகாரத்துக்கு பெரும் சவாலாக இருக்கும்.

புதிய சபாநாயகர் தேர்வு
இந்நிலையில் தான் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகவும், ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்த நான்சி பெலோசி பதவி விலகினார். இதையடுத்து டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை நியமனம் செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. கெவின் மெக்கார்தி என்பவர் புதிய சபாநாயகராக நியமனம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளி போட்டி
இது ஒருபுறம் இருக்க பிரநிதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்தாலும் கூட ஜனநாயக கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹக்கீம் ஜெப்ரிஸ் முடிவு செய்துள்ளார். இதற்கான பணியை அவர் தற்போது தொடங்கி உள்ளார். அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி தலைவராகவும் சபாநாயகராகவும் நான்சி பெலோசி இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் அந்த பதவிக்கு ஹக்கீம் ஜெப்ரிஸ் போட்டியிட உள்ளார்.

ஆதரவு கடிதம்
இதுதொடர்பாக அவர் தன்னுடன் உள்ள பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை துவங்கி உள்ளார். மேலும் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிப்பேன் எனவும், உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன் எனவும் அவர் கடிதம் எழுதி ஆதரவு கோரியுள்ளார்.

யார் இந்த ஹக்கீம் ஜெப்ரிஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹக்கீம் ஜெப்ரிஸ், நியூயார்க்கில் உள்ள புரூக்ளினை சேர்ந்தவர். இவர் நியூயார்க் எம்பியாக உள்ளார். இவருக்கு வயது 52. இவர் நியூயார்க் பல்கலைக்கழகம், பிங்காம்டன், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார். நியூயார்க் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு வழக்கறிஞராக இருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுவது என்ன?
இதுபற்றி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா பிரதிநிதித்துவ எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‛‛ஹக்கீம் ஜெப்ரிஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் நல்ல தலைவராக இருப்பார். இதனால் அவரை ஆதரிப்பதை பெருமையாக கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனைகள் பற்றி அவரிடம் அதிகமாக விவாதித்து உள்ளேன். சிறுவணிகங்களை வளர்ப்பது, மேம்படுத்துவதன் அவசியத்தை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் '' என்றார்.












Click it and Unblock the Notifications