சிவகாசியில் மினி கிளினிக் திறப்பு விழா.. பலூன்களை உடைத்து விளையாடி மகிழ்ந்த ராஜேந்திர பாலாஜி !

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மினி கிளினிக் திறப்பு விழாவில், தோரணமாக தொங்கிய பலூன்களை கத்தரிக்கோலை கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குத்தி உடைத்து அந்த இடத்தையே கலகலக்க வைத்தார்.

Recommended Video

    விருதுநகர்: அரசு விழாவில் ஒரு ஆச்சரியம்.. பலூன்களை வெடித்து மகிழ்ந்த அமைச்சர்..!

    மனதில் பட்டத்தை சட்டென்று போட்டு உடைப்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. பால் கலப்படம் குறித்து அவர் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Mini Clinic Opening Ceremony in Sivakasi, Rajendra Balaji enjoyed breaking balloons and playing

    மோடி டாடி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேற்பு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனங்கள் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் பல பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யனார் காலனியில் நேற்று பிற்பகல் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
    விழாவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பழனிச்சாமி, ராமநாதன், இணை இயக்குநர் மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர் . பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரிப்பன் வெட்டி மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்.

    அப்போது, அங்கு பலூன்களை அழகுக்காக கட்டி வைத்திருந்தார்கள். ரிப்பனை வெட்டித் துவக்கிய கத்தரிக்கோலை கையில் வைத்திருந்த அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திடீரென அங்கு தொங்கிய பலூன்களை ஒவ்வொன்றாக சிறு குழந்தைகள் விளையாடுவது போல, கத்தரிக்கோலை கொண்டு குத்திக் குத்தி உடைத்து விளையாடினார்.

    அமைச்சர் கத்தரிக்கோலுடன் பலூன் உடைத்து விளையாடியதை கண்டு அதிகாரிகள் ரசித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+