வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி.. வீட்டுத் தனிமையில் இருப்பதாக தகவல்!
விருதுநகர்: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதேபோல் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் தனி மனித இடைவெளி, சுகாதாரம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இருந்தும் தினசரி கொரோனா பாதிப்பானது 2 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதேபோல் இந்தியாவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இருந்தும், உயிரிழப்புகள் குறைவாக இருப்பதால், ஊரடங்கு உள்ளிட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.
இதனிடையே அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, இன்று முதல் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்ட மக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல், மத்திய அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications