விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’முதுகெலும்பு இருக்கா’ சீறிய எச்.ராஜா! நான் வேனா வேலை தர்றேன்.. ரிப்போர்ட்டர் செய்த சம்பவம்!

Google Oneindia Tamil News

விருதுநகர் : தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான ஆடியோ தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பிய நிலையில் 'நான் என் கம்பெனியில் வேலை தார்றேன் வந்து பாருங்கள்' என பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    ’முதுகெலும்பு இருக்கா’ சீறிய எச்.ராஜா! நான் வேனா வேலை தர்றேன்.. ரிப்போர்ட்டர் செய்த சம்பவம்!

    பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா எப்போதுமே அதிரடி அரசியல், ஆவேச பேச்சு என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருப்பவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து "யூ ஆர் ஆன்ட்டி இந்தியன்" என பேசிய அவரது பேச்சு தற்போது வரை சமூக வலைதளங்களில் பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது.

    இன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதிஇன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

     எச்.ராஜா

    எச்.ராஜா

    தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் செய்தியாளர்களை சந்திக்கும் போது திமுகவை கடுமையாக விமர்சிப்பதும், அதனை எதிர்த்து செய்தியாளர்கள் யாராவது கேள்வி கேட்டால், அவர்களை உடனே நீங்கள் திமுகவா? ஆன்ட்டி இந்தியன்! இந்த கேள்வியை திமுகவிடம் கேட்க முடியுமா? தைரியம் இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி அதிரடி காட்டுபவர் இன்றும் அப்படித்தான் ஒரு செய்தியாளரிடம் கேள்வி கேட்க அவர் கொடுத்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்," தில்லை நடராஜனை இழிவாக பேசிய யூடூப்பர் மைனர் விஜயனை கைது பண்ணவில்லை, கனல் கண்ணனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள். இது காவல்துறையா ?அல்லது ஸ்டாலினின ஏவல் துறையா?காவல்துறை அரசாங்கத்திற்கு எடுப்படியாக உள்ளது." என கடுமையாகப் பேசினார்.

    அண்ணாமலை ஆடியோ

    அண்ணாமலை ஆடியோ

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்களில் ஒருவர், ராணுவ வீரர் இறப்பின் போது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த எச். ராஜா இது போலியான ஆடியோ என்று எங்கள் மாவட்ட தலைவர் கூறியிருக்கிறார். யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ள ஆடியோவை பற்றி எல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள் அதற்கெல்லாம பதில் சொல்ல முடியாது.

    செய்தியாளர் பதிலடி

    செய்தியாளர் பதிலடி

    இதே போன்ற கேள்வியை உங்களால் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்க முடியுமா? உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? நீங்கள் எல்லாம் பயப்படுகிறீர்கள்? எச் ராஜாவிடம் கேள்வி கேட்டு விட்டால் தைரியம் வந்துவிடுமா! நேர்மையாக இருங்கள்! வேண்டுமானால் என்னிடம் வாருங்கள் நான் வேலை தருகிறேன்! என கூறினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் 'வேலையெல்லாம் வேண்டாம் வேண்டுமானால் என் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன் நீங்கள் வாருங்கள்' என கூறினார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    English summary
    The video in which the journalist responded by saying, 'I give u job in my company, come and see', while senior BJP leader H.Raja was furiously questioning the journalist, is spreading rapidly on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X