இயற்கை உபாதையைத் தணிக்க கெஞ்சியும்.. பஸ்சை நிறுத்தாத டிரைவர்.. கீழே குதித்து பெண் படுகாயம்!
Recommended Video

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை உபாதைக்காக பஸ்ஸை நிறுத்துமாறு கூறியும் பஸ்சை டிரைவர் நிறுத்ததால் அப்பெண் கீழே குதித்து விட்டார். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். ஆட்டோ ஓட்டுனர் செல்லதுரை என்பவரது மனைவியான இவர் கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுவலியில் அவதிபட்டுவந்ததாக கூறபடுகிறது.

தேனி மாவட்டம் ஆன்டிபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை ஆன்டிபட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்தில் திரும்பும் வழியில் தொடர்ந்து வயிற்றுவழி காரணமாக அவதிபட்டதாகவும் கூறபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லுபட்டி பகுதியில் இருந்து இயற்கை உபாதையைக் கழிக்க பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் டிரைவர் பஸ்ஸை நிறுத்தவில்லை. இதனால் அழகாபுரி என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது அந்தப் பெண் பேருந்தில் இருந்து குதித்தாக கூறபடுகிறது. படுகாயம் அடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவருகிறது.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications