முதலாளி மனைவின்னு பார்க்கல.. அண்ணன்னும் பார்க்கல.. விருதுநகர் பால் பண்ணையில் நடந்த மோசமான துரோகம்
விருதுநகர்: வேலைக்கு சேர்ந்த முதலாளிக்கே துரோகம் செய்துள்ளார் இளைஞர்.. அத்துடன் ஒரு கொலையையும் செய்துள்ளார்.. இவரை கைது செய்துள்ள விருதுநகர் போலீசார், தீவிரமான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது ராஜபாளையத்தில்?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் ராம்குமார்.. இவருக்கு 33 வயதாகிறது.. மனைவி பெயர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு 28 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்...

பால் பண்ணை: ராம்குமார் சொந்தமாக பால் பண்ணை வைத்துள்ளார்.. மாடுகளை வளர்த்து, பால் கறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார்... இவருடைய பால் பண்ணை வேலைக்காக, குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞர் வந்து சேர்ந்தார்.. இவர் ராம்குமாரின் சகோதரர் உறவுமுறை என்று கூறப்படுகிறது. 25 வயதான குமரேசனுக்கும் 28வயதான உமாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த ராம்குமார், மனைவிக்கு பலவித புத்திமதிகளை சொன்னார்.. ஆனாலும், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கணவரையும், 2 குழந்தைகளையும் விட்டு விட்டு குமரேசனுடனேயே சென்றுவிட்டார் உமா.. இந்த கள்ள ஜோடி இருவரும் வெளியூரில் ஒரே வீட்டில் தங்கி வாழ ஆரம்பித்தனர்.. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
காளிராஜ்: இதற்கு பிறகு, குமரேசனும், உமாவும், தங்களது குழந்தையுடன் மறுபடியும் ராஜபாளையத்திற்கே வந்தனர்.. தன்னுடைய மனைவி ஊருக்கு வந்திருப்பதை அறிந்த ராம்குமார், அவரை நேரில் சந்தித்து, தன்னை விட்டு பிரிந்து சென்றது குறித்து கேள்விகேட்க நினைத்தார்.. இதற்காக குமரேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குமரேசனுக்கும், ராம்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.. இதுவே கைகலப்பாக மாறிவிட்டது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமரேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து, ராம்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டார்.. கழுத்து, தலை, இடுப்பு பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ராம்குமார்.. சடலமாகி கிடந்த ராம்குமாரை பார்த்ததுமே, பயந்துபோன குமரேசன், அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்..
அரசு மருத்துவமனை: இதனிடையே , கொலை பற்றின தகவலறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார், ராம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். அத்துடன், தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி, தப்பி சென்ற குமரேசனையும் சுற்றிவளைத்து தற்போது கைது செய்துள்ளனர்..
தனக்கு சம்பளம் தரும் முதலாளி என்றும் பாராமல், உறவுமுறை அண்ணன் என்றும் பாராமல், அவரது மனைவியை அபகரிக்கிறோம் என்ற குற்ற உணர்வும் இல்லாமல், கொலையும் செய்திருக்கிறார் இந்த குமரேசன்.. அவரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications