விருதுநகர் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை - கைதானவர்களை காவலில் எடுக்க முடிவு
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது
விருதுநகர்: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. வன்கொடுமை சம்பவம் குறித்தும், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விருதுநகர்: விருதுநகரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. இளம்பெண் பாலியல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் பாண்டியநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் தாயாருடன் வசித்து வருகிறார். அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உறவு கொண்டதோடு அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

தொடர் தொந்தரவு
இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையில் ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

8 பேர் கைது
ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8பேர் என தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவர்களும் கைது
இதில் ஹரிஹரன் மாடசாமி ,பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் ராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி இந்த வழக்குகளுக்கான கோப்புகள் விசாரணை அதிகாரி சிபிசிஐடி அதிகாரி வினோதினியிடம் ஒப்படைத்தார். இன்று காலை சிபிசிஐடி எஸ்பி முத்தரசி விருதுநகர் அலுவலகத்திற்கு ஆவணங்களை பார்வையிட்டார்.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். வன்கொடுமை சம்பவம் குறித்தும், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காவலில் எடுக்கத் திட்டம்
இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பள்ளி மாணவர்கள் தவிர மீதமுள்ள குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications