விருதுநகரில் லிஃப்ட் கொடுப்பது போல பைக்கில் ஏற்றி சென்று மூதாட்டி கொலை.. 5 பவுன் நகைக்காக தாய் - மகள் கொடூரம்
விருதுநகர்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை லிஃப்ட் கொடுப்பதாக கூறி தங்களது மொபட்டில் ஏற்றி சென்ற தாய் மகள் இருவரும் செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகைக்காக தாய் மகள் இருவரும் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மொபட்டை நிறுத்தி கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் விருதுநகரில் அரங்கேறி இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. ஆனால் சமீப காலமாக இந்த சம்பவங்கள் சற்று குறைந்து இருந்தன.

லிஃப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி
ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாலும், பணத்தின் மீதான மோகத்தாலும் மீண்டும் ஒரு சில இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தாய் மகள் இருவரும் சேர்ந்து தனியாக சாலையில் நடந்து சென்ற மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுவது போல 5 பவுன் நகையை அபேஸ் செய்ததோடு, அந்த மூதாட்டியை கொலையும் செய்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
திருமண வீட்டிற்கு சென்ற மூதாட்டி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி அம்பிகா (வயது 62). சம்பவத்தன்று இவர் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் கிராமத்திக் நடந்த திருமண விழாவிற்காக சென்று இருந்தார். ஆனால் மாலை நேரம் ஆகியும் மூதாட்டி வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த குடும்பத்தினர் திருமண வீட்டினர், உறவினர்களிடம் விசாரித்தனர்.
ஆனால் அவர்களும் இங்கு இல்லை என கூறிவிட்டனர். இதனால் நாலாபுறமும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருச்சுழி போலீசார் மூதாட்டியை தேடி வந்தனர். இதற்கிடையே தான் திருச்சுழி டூ காரியாபட்டி செல்லும் வழியில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை
இதில் முட்புதரில் பிணமாக கிடந்தது, மூதாட்டி அம்பிகா என்பது தெரியவந்தது. அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஏன் மூதாட்டி இங்கு தனியாக வரவேண்டும்?, காட்டுப்பகுதிக்கு வந்தது ஏன்?, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள் எங்கே போனது? யாரேனும் அழைத்து வந்து கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு மொபட்டில் சென்ற இருவர் ஒன்று உடல் கிடந்த குறிப்பிட்ட தொலைவில் மூதாட்டியை அழைத்து சென்றது தெரியவந்தது. இவர்கள் ஏன் மூதாட்டியை அழைத்து செல்ல வேண்டும், இவர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என போலீசார் மொப்பட்டின் எண்ணை வைத்து அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
தாயும் மகளும் சேர்ந்து கொன்றது அம்பலம்!
அதாவது அந்த இரு பெண்கள் தான் மூதாட்டியை லிஃப்ட் கொடுப்பது போல், உதவி செய்வதாக கூறி மொபட்டில் ஏற்றி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. காரியாபட்டி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவரது மகள் 17 வயது சிறுமி என இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications