அதிர்ச்சி.. கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி.. சிகிச்சை பலனின்றி பரிதாபம்!
விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த விவகாரத்தில் தற்கொலை முயற்சி செய்த இளைஞர் பலியாகி உள்ளார்.

என்ன நடந்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போதிய சோதனை செய்யாமல் ரத்தத்தை அந்த பெண்ணுக்கு ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

மிக மோசம்
இதையடுத்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சி
இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மிகவும் மோசமான நிலையில் இருந்த இவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பலியாகிவிட்டார்
இந்த நிலையில் தற்போது கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications