அட சாமி! "இமயமலை" அளவு.. பூமிக்கு கிட்ட வரும் ஆஸ்டிராய்டு! மனிதர்களுக்கு ஆபத்தா? நாசா கூறுவது என்ன
வாஷிங்டன்: சுமார் 1.8 கிலோ கிலோமீட்டர் அகலமுள்ள அபாயகரமான ஆஸ்டிராய்டு விரைவில் பூமிக்கு மிக அருகே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்த விண்வெளியில் ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறுகோள்கள் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும். இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளால் பெரும்பாலான நேரங்களில் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
இந்த ஆஸ்டிராய்டுகள் அரிதினும் அரிய நிகழ்வாக சில சமயம் பூமியின் சுற்றுவட்டார பாதையில் நுழையும். அப்போதும் கூட பூமியை அடையும் முன்பு, அவை வெப்பத்தில் பஸ்பம் ஆகிவிடும்

இமயமலை
இதனிடையே சுமார் 1.8 கிலோமீட்டர் அகலமுள்ள அபாயகரமான சிறுகோள் ஒன்று சூரியனைச் சுற்றி வரும் பாதையில் பூமிக்கு அருகே வர உள்ளது. 1.8 கிலோமீட்டர் அகலம் என்றால், இமயமலை அளவு என்று கூறலாம். மணிக்கு 47,196 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த சிறுகோள் இந்த மாதம் இறுதியில் பூமிக்கு நெருக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்ற போதிலும், இதை அபாயகரமானதாக நாசா வகைப்படுத்தியுள்ளது.

1989 JA ஆஸ்டிராய்டு
இந்த ஆஸ்டிராய்டு கடந்த 1989ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இது 1989 JA என்று பெயரிடப்பட்டது. இந்த ஆஸ்டிராய்டு பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே வரும்போது தொலைநோக்கியின் உதவியுடன் இதைப் பார்க்க முடியும். பூமியில் இருந்து சுமார் 40,24,182 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த ஆஸ்டிராய்டு வரும். இது பார்க்கத் தொலைதூரம் போல தோன்றினாலும் கூட பறக்கும் பொருளுக்கு இது ஆபத்தானது தான்.

1996ஆம் ஆண்டு
கடைசியாகக் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு மிக அருகில் வந்தது. அப்போது இந்த ஆஸ்டிராய்டு சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து சென்றது. பூமியைக் கடந்த பிறகு, இந்த ஆஸ்டிராய்டு சூரியனைச் சுற்றி ஒரு வருட கால சுற்றுப்பாதையில் சுற்றும் என்பதால் இது அப்பல்லோ ஆஸ்டிராய்டு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

அடுத்து எப்போது
இந்த ஆஸ்டிராய்டு அடுத்து வரும் செப். 2029ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும். அதன் பின்னர் 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு அருகே வரும். ஆஸ்டிராய்டு என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவான போது, எஞ்சிய பாறைத் துண்டுகள் ஆகும். இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளால் பூமிக்கு பெரும்பாலும் எவ்வித ஆபத்தும் இல்லை.

கவலைப்படத் தேவையில்லை
பூமியில் இருந்து சூரியனுக்கான தூரத்தை விட 1.3 மடங்கு குறைவான தூரத்தில் ஆஸ்டிராய்டு பூமியை நெருங்கும் போது, அது கவலைக்குரியதாகக் கருதப்படும் கடைசியாகப் பூமிக்கு அருகில் வந்த பெரிய ஆஸ்டிராய்டு 138971 (2001 CB21) ஆகும். இது 1.3 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இந்த ஆஸ்டிராய்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி பூமியில் இருந்து 49,11,298 கிலோமீட்டர் தொலைவுக்கு வந்தது. இந்த ஆஸ்டிராய்டு சூரியனை 400 நாட்களில் சுற்றி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications