இந்தியர்கள் கொன்று குவிக்க திட்டம்! அமெரிக்க கோயிலில் நுழைந்து.. சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த சதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்து கோயிலில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இனவெனறி கருத்துகளை கொண்ட ஆவணம் ஒன்றையும், இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை தொடர்பான குறிப்புகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் என எடுத்து கொண்டால் டாப் 3ல் இந்தியர்கள் வருவார்கள். குறிப்பாக அதிக வருமானம் ஈட்டும் ஐடி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதேநேரம் சமீப காலமாக அங்கு இனவெறி பிரச்சினைகளும் அதிகரிக்கிறது. இதனால் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் மீண்டும் நடந்துள்ளது.

US Hindu temple attack America US

சதித்திட்டம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இந்து கோயிலில் துப்பாக்கி சூடு நடத்தத் திட்டமிட்ட 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளை இனவெறி கொண்ட அவர், இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை தொடர்பான பேப்பர்களையும் வைத்திருந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலடைன் பகுதியை சேர்ந்த அலெக்சாண்ட்ரோஸ் பபோராக்கிஸ் என்பவர் அக்டோபர் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆரோரா பகுதியில் உள்ள இந்து கோயில் மீது அவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக போலீசார் கூறுகிறார்கள். இருப்பினும், தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வழிபாட்டுத் தலம் எது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

என்ன நடந்தது

அப்பகுதியில் உள்ள உள்ளூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது. பபோராக்கிஸ் அனுப்பிய தகவல்கள் குறித்து ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான திட்டம் அடங்கிய ஆவணமும், துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மேகசின்கள், பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட உபகரணங்களின் படங்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து ஒரு ஆவணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தெற்காசிய வம்சாவளியினர், குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை தொடர்பான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

பகீர்

அதில் ஏகப்பட்ட துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், தாக்குதலுக்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசம் கொண்ட உடை ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதில் வெள்ளை இனவெறி கொண்ட சின்னங்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தது, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் பபோராக்கிஸ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வு துறையான எஃப்.பி.ஐ. உடன் இணைந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பறந்த எச்சரிக்கை

துப்பாக்கி சூடு ஆபத்து என்ற தகவல் கிடைத்ததும், ஆரோரா போலீசார் அப்பகுதியில் உள்ள இந்து கோயில்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தற்போது அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர்கிடையே சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் இது தொடர்பாக தனது ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளது. உரிய நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டுவதாகவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல ஹிந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷனும் போலீசாரின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+