'நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணா போச்சே'.. மறிமானை தாக்க சென்று பல்பு வாங்கிய காட்டின் ராஜா!
வாஷிங்டன்: யாரையும் எளிதாக நினைத்துவிடக்கூடாது என்பதை காட்டும் வகையில், காட்டில் தனியாக நின்றுகொண்டிருந்த மறிமானை தாக்க முயன்று சிங்கம் ஒன்று பல்பு வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வன விலங்குகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் எப்போதும் டிரெண்டிங் ஆகிவிடும். வனவிலங்குகள் இரைக்காக வேட்டையாடுவது, தங்களுக்குள் கொஞ்சிக்கொள்வது என விலங்குகள் குறித்த வீடியோ எதுவாகியிருந்தாலும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும்.
டிஸ்கவரி சேனல்கள் உலகம் முழுவதும் பெரும் பார்வையாளர்களை கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

டிரெண்ட் ஆகும் வீடியோ
வனவிலங்குகள் குறித்த வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் இணையத்தில் இருக்கிறதே என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வனவிலங்குகள் குறித்த வீடியோவுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. காட்டுக்கே ராஜாவானாலும் இரை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது, கடுமையான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும் என்பதை காட்டும் வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ டிரெண்டிங் ஆகி வருகிறது.

மெதுவாக நடந்துவரும் சிங்கம்
தி டார்க் ஆஃப் நேட்சர் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், வனப்பகுதி ஒன்றில் உள்ள சிறிய குட்டையில் மறிமான் ஒன்று தண்ணீர் குடித்து கொண்டு இருக்கிறது. இதைக் கவனித்த காட்டுக்கு ராஜாவான சிங்கம் இன்னைக்கு நமக்கு உணவுக்கு பிரச்சினை இல்லடா.. என்ற நினைப்பில் தனக்கே உரிய பாணியில் மெதுவாக நடந்து வருகிறது.

தப்பித்தால் போதும் என ஓட்டம்
தக்க சமயம் வந்ததும் மறிமானை பாய்ந்து சென்று கவ்வுகிறது. சிங்கத்தின் அட்டாக்கை சற்று எதிர்பாராத மறிமான் ஒரு நிமிடம் தடுமாறி திணறுகிறது. உயிர்பயத்தில் போராடினாலும் சில வினாடிகளில் சுதாரித்த மறிமான், சிங்கத்திடம் இருந்து தப்பிக்க முனைகிறது. வளைந்து நெளிந்து சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பும் மறிமான், தனது கொம்புகளால் தாக்க முயற்சிக்கிறது. இதனால், தப்பித்தால் போதும் என்ற தொனியில் குட்டையில் இறங்கி தலைதெறிக்க ஓட்டம் எடுக்கிறது சிங்கம்.

யாரையும் எளிதாக நினைத்துவிடக்கூடாது
மறிமானோடு ஒப்பிடும் போது மிக வலிமையான விலங்கு என்றாலும் யாரையும் எளிதாக நினைத்துவிடக்கூடாது என்பதை காட்டும் வகையில் அமைந்து இருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிங்கத்தின் அதிர்ஷ்டம்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மறிமானுக்கு கொம்புகள் இருப்பது இதற்குதான் என்பதை இப்போதுதான் எனக்கு புரிகிறது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், 'சிங்கத்தின் அதிர்ஷ்டம்.. நல்ல வேளையாக கொம்பு அதன் உடலை பதம் பார்க்கவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications