உள்ளே வரும் அமெரிக்கா! மத்திய கிழக்கில் ராணுவம் குவிப்பு! தனது குடிமக்களுக்கு மட்டும் தனியாக வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: லெபனான் மீது இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இப்போது திடீரென அமெரிக்காவும் தனது படைகளை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வருகிறது. இதனால் அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச போர் பதற்றங்களை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், இன்னொரு பக்கம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

israel hezbollah middle east

தாக்குதல்: நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பல நூறு பேர் காயமடைந்தனர். இப்படி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலை நடத்த முயன்ற நிலையில், அதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் அல்லது வேறு நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்குப் பகுதியில் இப்படி பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அங்கு திடீரென கூடுதல் படைகளை அனுப்பி வருகிறது. இது மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் 40 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ள சூழலில், கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் 5 மாத பிளான்! முதலில் பேஜர்.. அடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. அலறும் ஹிஸ்புல்லா


எதற்காக: அதேநேரம் எத்தனை வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன டாஸ்க் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட அமெரிக்க பாதுகாப்பு துறையான பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பான கேள்விக்கு பாட் ரைடர் கூறுகையில், "மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன், அப்பகுதியில் ஏற்கனவே உள்ள நமது படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். இருப்பினும், பாதுகாப்பு காரணமாக எத்தனை பேரை அனுப்புகிறோம்.. எதற்காக அனுப்புகிறோம் உள்ளிட்ட தகவல்களைப் பகிர முடியாது" என்றார்.

தாக்குதல்: லெபானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையைக் குறிவைத்து இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பல நூறு பேர் காயமடைந்தனர். வரும் நாட்களில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தவே இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை நிச்சயம் தீவிரப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் குடிமக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை.. உடனே குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்


அமெரிக்கா வார்னிங்: இது பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதால் தனது நாட்டு மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுகையில், "ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக, லெபனானில் வசிக்கும் அமெரிக்க மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள்.

தேவைப்பட்டால் அங்குள்ள அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றக் கூடுதல் படைகளை அனுப்பவும் அமெரிக்கா தயாராக இருக்கிறோம். அங்குப் பதற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிராந்திய போராக மாறாமல் இருக்க முயன்று வருகிறோம். ஆனாலும், அங்கு ஆபத்தான சூழலே நிலவுகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+