சாட் ஜிபிடி கிளப்பிய புயல்! இனிமேல் இந்த 20 வேலைகள் காலி.. Chat GPTயே சொன்ன மேட்டரை கேளுங்க! பரபர

சாட் ஜிபிடியால் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சாட் ஜிபிடி தான் இப்போது டெக் உலகில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதனிடையே மொத்தம் 20 வேலைகளைப் பட்டியலிட்டுள்ள சாட்ஜிபிடி, இந்த வேலை எல்லாம் பறிபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் இப்போது எங்குத் திரும்பினாலும் சாட் ஜிபிடி பற்றியே பேச்சாக இருந்து வருகிறது.. சாட் ஜிபிடி உலகின் முதல் ஏஐ கருவி இல்லையென்றாலும், இதுவரை நாம் பார்த்ததிலேயே சக்திவாய்ந்த ஏஐ கருவியாக இருந்து வருகிறது.

நாம் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும், அதற்கு சாட் ஜிபிடி துல்லியமாகப் பதில் சொல்கிறது. இதன் காரணமாகவே சாட் ஜிபிடி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதன் பயன்பாடு அதிகரிக்கிறது.

சாட் ஜிபிடி

சாட் ஜிபிடி

இப்போதும் சாட் ஜிபிடி டெஸ்டிங் முறையில் தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த சாட் ஜிபிடி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் எனப் பதில் தருகிறது. கேள்விகள் என்று மட்டும் இல்லை, கவிதை கேட்டால் கவிதை சொல்லும், லவ் லெட்டர் கேட்டால் அட்டகாசமாக லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கும். அந்தளவுக்கு பக்காவான ஒரு ஏஐ கருவியாகவே சாட் ஜிபிடி இருந்து வருகிறது.இப்படி எந்தவொரு கேள்வி கேட்டாலும் அறிவார்ந்த மனிதன் எப்படி பதில் சொல்வானோ அதேபோல பதில் அளிக்கிறது சாட் ஜிபிடி.

அச்சம்

அச்சம்

அது மட்டுமின்றி பல்வேறு கல்லூரி தேர்வுகள், போட்டி தேர்வுகள் என்று அனைத்தையும் கூட அது அசல்டாக பாஸ் செய்துவிடுகிறது. மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இந்த சாட் ஜிபிடி கருவியை டெவலப்பர்கள் உருவாக்கியுள்ளனர். இருப்பினும், இது நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது. இது இப்போது வரை நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது என்ற போதிலும், இது குறித்த அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மனித வேலைகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகமாகவே இருக்கிறது.

புது வெர்ஷன்

புது வெர்ஷன்

இது குறித்து அங்கு ஆய்வு ஒன்றும் நடத்தப்பட்டது. சுமார் 1000 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதில் சுமார் பாதி நிறுவனங்கள் தங்கள் பிஸ்னஸில் சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்களை நீக்கிவிட்டு சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஊழியர்கள் தங்கள் வேலையை சாட் ஜிபிடி பறிக்கக் கூடும் என்று அஞ்சுகின்றனர். இதனிடையே அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி- ஜிபிடி 4 என்ற புது வெர்ஷனை வெளியிட்டுள்ளது.

நெட்டிசன் கேள்வி

நெட்டிசன் கேள்வி

சாட் ஜிபிடியை உருவாக்கியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம் இந்த சாப்ட்வேர் நிச்சயம் மனிதர்களை மாற்ற முடியாது என்றும் இது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டது.என்றும் கூறி வருகிறது. இருப்பினும், இந்த சாட் ஜிபிடி பலத்தை நம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. வரும் காலத்தில் இது செய்யும் பல மெகா விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். இதனிடையே நெட்டிசன் ஒருவர், எந்த வேலைகள் சாட் ஜிபிடி செய்யும் என்றும் எந்த 20 துறையில் பணியாற்றுபவர்கள் சாட் ஜிபிடியால் வேலையை இழப்பார்கள் என்று கேட்டிருந்தார்.

20 வேலைகள் காலி

20 வேலைகள் காலி

அதற்கு சாட் ஜிபிடி கொடுத்த பதில் தான் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மொத்தம் 20 வேலைகளைப் பட்டியலிட்டுள்ள சாட்ஜிபிடி இந்த வேலை எல்லாம் பறிபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. டேட்டா என்ட்ரி கிளார்க், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, பிழை திருத்துபவர், சட்ட ஆலோசகர், புக் கீப்பர் ஆகிய வேலைகள் டாப் 5 வேலைகளாகப் பட்டியலிட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர், காபி ரைட்டர், சந்தை ஆராய்ச்சியாளர் (Market Research Analyst), சமூக ஊடக மேலாளர், அப்பாயின்மென்ட் ஷெட்யூலர் ஆகிய வேலைகளும் பறிபோகும் என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.

என்ன வேலை

என்ன வேலை

அத்துடன் மட்டுமின்றி, டெலிமார்கெட்டர், மெய்நிகர் உதவியாளர் (Virtual Assistant), டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் (Transcriptionist), நிருபர், டிராவர் ஏஜெண்ட்கள், ஆசிரியர் ஆகியோருக்கும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப ஆய்வாளர், இமெயில் மார்கெட்டிங் செய்பவர், கண்டெண்ட் மாட்ரேடர், வேலைகளுக்கும் சிக்கல் என்று கூறியுள்ளது. கடைசியாக வேலைக்கு ஆள் எடுக்கும் Recruiter வேலையையும் காலி செய்துவிடுவேன் என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாட் ஜிபிடி அட்வான்டேஜ் என்ன

சாட் ஜிபிடி அட்வான்டேஜ் என்ன

வேகம் மற்றும் துல்லியம், தகவல் தொடர்பு, கூர்ந்து கவனம் செலுத்துதல், ஆராய்ச்சி, கணித திறன்கள், மொழி புலமை, படைப்பாற்றல், பகுப்பாய்வு திறன், நேர மேலாண்மை, தட்டச்சு திறன், உண்மை சரிபார்ப்பு, சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்டவை மனிதர்களைக் காட்டிலும் தனக்கு அதிகமாக உள்ளதாக சாட் ஜிபிடி கூறியுள்ளது. இது மனிதர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், சாட் ஜிபிடி உட்பட எந்தவொரு கருவியாலும் மனிதர்களை மாற்ற முடியாது என்றும் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

டெக் துறையில் ஒரு காலத்தில் மைக்ரோசாப்ட் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் மைக்ரோசாப்ட் தனது ஆதிக்கத்தை இழந்துவிட்டது. இந்தச் சூழலில் இழந்த இடத்தை மீட்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நல்ல ஒரு சான்ஸ் கிடைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நிதியளித்த ஓபன் ஏஐ நிறுவனம் தான் இந்த சாட் ஜிபிடியை உருவாக்கியுள்ளது. இதனால் தனது அனைத்து தயாரிப்புகளின் சாட் ஜிபிடியை பயன்படுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தனது பிங் தேடுபொறி தளத்தில் சாட் ஜிபிடியை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+