"டேன்ஞர்!" ரொக்க பணம் vs கிரெடிட் கார்டு.. கொரோனா அதிக காலம் இருப்பது எதில் தெரியுமா! ஷாக் முடிவுகள்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அடுத்த அலை ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசை நாம் உலகில் இருந்து இன்னும் முழுமையாக அழிக்கவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை அழிப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனிடையே சில நாடுகளில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்குவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆய்வு
இதன் காரணமாக கொரோனா எப்படிப் பரவுகிறது என்பது குறித்தும் ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் டாலர், ரூபாய் போன்ற நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நோட்டுகளின் புழக்கமும் கணிசமாகக் குறைந்தது. பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பிளாஸ்டிக் பண அட்டைகள் பக்கம் நகர்ந்தனர்.

ரொக்கம் vs கார்டுகள்
அதேபோல பல தொழில் நிறுவனங்களும் கூட ரொக்கப் பணம் முறையை நிறுத்திவிட்டன. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட எந்தவொரு மருத்துவ அமைப்பும் ரொக்க பணம் காரணமாக கொரோனா பரவுகிறது எனக் கூறவில்லை. இருப்பினும், மக்களிடையே ரொக்கம் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற எண்ணம் நன்கு பதித்துவிட்டது. இந்நிலையில், இதற்கு நேர்மாறான ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

கட்டுப்படுத்த முடியாது
அதில் கொரோனா வைரசிற்குக் காகித பணத்தில் வளரும் திறன் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பிளாஸ்டிக் பண அட்டைகளில் வைரஸ் அதிக காலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் முதலில் பரவிய பின்னர், சுமார் 48 மணி நேரம் வரை பண அட்டைகளில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரொக்க பணத்திற்குப் பதிலாகப் பண அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ரொக்கத்தில் எவ்வளவு
இந்த ஆய்வில் ரொக்க பணம் மற்றும் பண அட்டைகளில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து 30 நிமிடங்கள், 4 மணிநேரம், 24 மணிநேரம் மற்றும் 48 மணிநேரம் கால இடைவெளியில் சோதனை செய்யப்பட்டது. அதில் நாணயங்களில் வெறும் 30 நிமிடங்களில் கொரோனா 99.9993 சதவீகிதம்அழிந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து 24 மற்றும் 48 மணி நேரத்தில் சோதனை செய்தபோது, ரூபாய் நோட்டுகளில் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை.

கார்டுகளில் எவ்வளவு
இதற்கு நேர்மாறாக, கொரோனா வைரசானது பண அட்டைகளில் 30 நிமிடத்தில் 90 சதவீதம் மட்டுமே அழிகிறது. அடுத்து 4 மணிநேரத்தில் 99.6 சதவீதமாகவும், 24 மணிநேரத்தில் 99.96 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல 48 மணி நேரத்திற்கு பிறகும் பண அட்டைகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாணயங்களிலும் பிளாஸ்டிக் அட்டைகளை போலவே கொரோனா வைரஸ் அதிக காலம் இருந்தது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications