வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடை வெயில் கொரோனா வைரஸ்க்கு முடிவு கட்டுமா ? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: காய்ச்சலை உருவாக்கும் வேறு சில சுவாச வைரஸ்களைப் போலவே, வெப்பநிலை அதிகரிக்கும் போது புதிய கொரோனா வைரசும் குறைவாக பரவ வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியோடு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஆனால் SARS-CoV-2 என பெயரிடப்பட்ட புதிய கொரோனா வைரஸ், குளிர்ந்த பகுதிகளில் பரவியதைப் போல், உலகின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் அதிக அளவு பரவவில்லை என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    சமூக அறிவியல் ஆராய்ச்சி நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்ட ஆரம்ப பகுப்பாய்வு இன்னும் மதிப்பாய்வில் உள்ளது. இருந்த போதிலும் வெப்பமான மாதங்களில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு பார்வையை நமக்கு இந்த ஆய்வு வழங்குகிறது.

    மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த காசிம் புகாரி மற்றும் யூசுப் ஜமீல் இருவரும், COVID-19 என்ற வைரஸால் ஏற்பட்ட நோயின் உலகளாவிய நிகழ்வுகளை பாதிப்புகளை ஆராய்ந்தனர். அவர்களின் ஆய்வில் 90% நோய்த்தொற்றுகள் 37.4 முதல் 62.6 டிகிரி பாரன்ஹீட் (3 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் காற்றில் ஒரு கன மீட்டருக்கு (g / m3) 4 முதல் 9 கிராம் வரை ஈரப்பதம் (வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் காற்றில் ஈரப்பதம் எவ்வளவு இருக்கிறது என்பதன் மூலம் முழுமையான ஈரப்பதம் வரையறுக்கப்படுகிறது) உள்ள பகுதிகளில் பரவி உள்ளது தெரியவந்துள்ளது.

    வெப்பநிலை அதிகம்

    வெப்பநிலை அதிகம்

    சராசரி வெப்பநிலை 64.4 டிகிரி பாரன்ஹீட் (18 டிகிரி செல்சியஸ்) க்கும் அதிகமான வெப்பம் மற்றும் 9 g/m3 க்கும் அதிகமாக காற்றின் ஈரப்பதம் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை ( COVID-19 வழக்குகள்) உலக அளவில் 6% க்கும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆசிரியர்கள் இதுபற்றி கூறுகையில், "2019-nCoV வைரஸ் பரவுதல் இதுவரை வெப்பமான ஈரப்பதமான சூழ்நிலைகளில் குறைந்த செயல்திறனைக் கொண்டிருந்திருக்கலாம். இந்த கொரோனா வைரஸ் பரவுவதில் காற்றின் ஈரப்பதம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரிமாற்றத்தின் பெரும்பகுதி ஒப்பீட்டளவில் குறைந்த ஈரப்பதமான பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது.

    வட அமெரிக்காவில்

    வட அமெரிக்காவில்

    வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். இந்த சூழல் ஜுன் வரை நீடிக்கும். காற்றில் ஈரப்பதம் 9 கிராம் / மீ 3 என்ற அளவை விட அதிகரிக்கும் போதுதான் கொரோனா வைரஸ் பரவுவது குறைய தொடங்கும். இருப்பினும், மார்ச் 15 க்குப் பிறகு 18 டிகிரி செல்சியஸ் (64.4 டிகிரி எஃப்) சராசரி வெப்பநிலை கொண்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 (கொரோனா வைரஸ்) வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை குறைப்பதில் சரசாரி வெப்பநிலையைவிடவும் மிக அதிகப்பபடியான வெப்பத்தின் பங்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். ஆகையால், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபட்சம் வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும், வடக்கு அமெரிக்க பிராந்தியங்களில் ஜுலைக்கு பிறகு மட்டுப்படுத்தப்படும். ஏனெனில் ஜூலைக்கு பிறகு இப்போது உள்ள குறைந்த வெப்பநிலைகள் அங்கு மாறிவிடும் " இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

    நியாமல்லை

    நியாமல்லை

    இதனிடயே டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம், ஷாஃப்னர், கொரோனா வைரஸ் வெப்பமயான சூழலில் கொரோனாவின் தாக்கங்கள் குறித்து கூறுகையில், "வெப்பம் மற்றும் ஈரப்பதம் மட்டுமே வைரஸ் பரவுதை குறைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. எனினும் இப்போதைய ஆய்வு எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தரக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

    நுண்ணிய கோளம்

    நுண்ணிய கோளம்

    காய்ச்சல் வைரஸ்கள் போன்ற சில சுவாச வைரஸ்கள் பரவுவது அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலையில் குறைகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஏன் காய்ச்சல் வைரஸ் அல்லது பிற பருவகால வைரஸ்களை பாதிக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. நீங்கள் சுவாசிக்கும்போது, ​​உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள சில வைரஸ் காற்றில் வெளியே தள்ளப்படும். நாம் ஒரு நுண்ணோக்கியில் அந்த வைரஸைப் பார்த்தால், அது ஒரு ஈரப்பதத்தின் நுண்ணிய கோளத்தால் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் காணமுடியும்.

    வாய்ப்பை குறைக்கும்

    வாய்ப்பை குறைக்கும்

    குளிர்காலத்தில் உங்களுக்கு குறைந்த ஈரப்பதம் இருக்கும்போது, ​​அந்த ஈரப்பதத்தின் கோளம் ஆவியாகிவிடும், இதனால் வைரஸ் நீண்ட காலத்திற்கு காற்றில் சுற்றக்கூடும், ஏனெனில் ஈரப்பத கோளம் இல்லாத காரணத்தால் ஈர்ப்பு காரணமாக அதை தரைக்கு இழுக்காது. ஆனால் கோடை காலத்தில் ஒரு வைரஸ் துகள்களை நீங்கள் வெளியேற்றும் போது, ​​சுற்றியுள்ள நீர்த்துளி ஆவியாகாது, அதாவது அது கனமாக இருக்கும், மேலும் ஈர்ப்பு அதை காற்றிலிருந்து மிக எளிதாக வெளியேற்றும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஈரப்பதம் இருக்கும் வரை அது வட்டமிடாது. இது அருகில் உள்ள நபருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

    வெப்பமான மாதம்

    வெப்பமான மாதம்

    இதனால் கோடையில் காய்ச்சல் பரவுதல் மிகக் குறைந்த அளவாக குறைகிறது, எனவே வெப்பமான மாதங்களில் இதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் போன்ற பிற வைரஸ்கள், "பருவகால விநியோகத்தைக் கொண்டிருக்கின்றன", இது இன்ஃப்ளூயன்ஸாவைப் போல வியத்தகு முறையில் இல்லை. எனினும் வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதற்கு வெப்பமான மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள மாதங்களை மட்டும் நம்மால் நம்ப முடியாது. வீதியின் வெயில் பக்கத்தில் மட்டுமே நடக்க விரும்புவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் நடக்கும் மறுபக்கத்தில் நிழலும் உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே இந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்ல வருவது குளிர்காலம், குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ளது. வெயில் அதிகம் உள்ள பகுதியில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்பது தான்.

    English summary
    Could the summer bring an end to COVID-19? becasue Warmer temperatures and higher humidity could help to slow spread of the virus:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X