கொரோனா 3வது அலை அதி தீவிரம் - உலகம் முழுவதும் 22 கோடி பேர் பாதிப்பு - 45 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 22,05,90,713 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,58,492 புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,05,90,713 பேராக அதிகரித்துள்ளது. 19,70,81,718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
Recommended Video
உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல் அலையில் தொடங்கிய இந்த கொடுந்தொற்று நான்காவது அலை வரை மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதித்து வருகிறது.
உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. ஆல்பா, பீட்டா, கப்பா என பலவகையான கொரோனாக்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. 'மு' வகை கொரோனா வைரஸ் ஒருபக்கம் தனது கோர பிடியை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மீண்டவர்கள் எண்ணிக்கை
கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,19,032 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19,70,81,718 பேராக உயர்ந்துள்ளது.

45,66,156 பேர் மரணம்
கொரோனாவால் ஒரே நாளில் 9,759 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 45,66,156 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,511 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 749 பேரும் ரஷ்யாவில் 800 பேரும் மரணமடைந்துள்ளனர்.

3வது அலை அதி தீவிரம்
அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலமாகவே கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனஅங்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 1,82,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் 4,07,03,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3,12,62,160 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்கா முழுவதும் 87,76,512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 1,511 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,64,934 பேராக உயர்ந்துள்ளது.

3,29,44,691 பேர் பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 42,346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,44,691பேராக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் மொத்தம் 2,08,56,060 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 5,82,753 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் நாடுகளில் 68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 3வது அலை
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 7வது இடத்தில் உள்ளது. அங்கு 64,58,630பேரும், ஈரான், அர்ஜென்டைனா, கொலம்பியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராகி வருகின்றன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications