அமெரிக்காவை புரட்டியெடுக்கும் டெல்டா வைரஸ்.. அதிக உயிரிழப்பு..மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக அதிகமாக இருக்கிறது. பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தள்ளாடி வருகின்றன.
Recommended Video
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை அமெரிக்காவை போட்டு பாடாய்படுத்தியது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

டெல்டா வைரஸ் தாக்கம்
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா படிப்படியாக குறைந்தது. பின்பு கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியபோது அமெரிக்காவில் கொரோனா பெருமளவு குறைந்து விட்டது. ஆனால் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் அமெரிக்காவில் மீண்டும் அதிக பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகியுள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,19,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 569 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. புளோரிடா, தென் கரோலினா, டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் உள்ள பல மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் போராடி வருகின்றன. அமெரிக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி புளோரிடா மாகாணத்தில் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரை ஒவ்வொரு நாளும் 1,00,000 பேரில் 690.5 பேருக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் இவர்களில் 75 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

லூசியானா
லூசியானா மாகாணத்தில் சுமார் 2,450 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது கடந்த 10 நாட்களில் 20% வீழ்ச்சி என்ற போதிலும் முதல் அலைக்கு பின்னர் இது மிக அதிகம் என்று கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் கூறினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, டெல்டா வைரஸ் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 14 மாகாணங்களில் 50% க்கும் அதிகமான உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

எச்சரிக்கை
மேலும் 28 மாகாணங்களில் 10% உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. செப்டம்பர் நடுப்பகுதியில் அமெரிக்காவில் தினசரி உயிரிழப்புகள் 1,400 என்று உச்சத்தில் இருக்கும் என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகருமான அந்தோனி ஃபாசி ''டிசம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவில் 1,00,000 புதிய கொரோனா உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு, கடும் கட்டுப்பாடு காரணமாக இதனை தவிர்க்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications