கொரோனா மூன்றாவது அலை - உலகம் முழுவதும் 48 லட்சம் பேர் மரணம் - தவிக்கும் அமெரிக்கர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 7,262 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 48,05,020 பேராக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனா மூன்றாவது அலை அமெரிக்கா, பிரிட்டனில் தீவிரமாக வீசத் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,64,305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,50,32,053 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 23 கோடி பேர் சிக்கியுள்ளனர். 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா மூன்றாவது அலை பல நாடுகளில் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,33,269 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,17,76,896 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 7,262 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 48,05,020 பேராக அதிகரிப்பு.
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 116,447 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மொத்தம் 4,44,38,095 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 3,38,04,189 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 1,805 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,18,968 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 18,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,14,45,651 பேராக அதிகரித்துள்ளது. 492 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,97,292 பேராக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 35,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 78,41,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா, துருக்கி, பிரான்ஸ் நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தி வருகின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 13 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் விமானங்களில் பயணம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே பாகிஸ்தானுக்குள் உள்நாட்டு விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்'' என பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை மந்திரி குலாம் சர்வார் கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விமானங்களின் பயணம் செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போடவேண்டாம் என டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்ட நோயாளிகள் உரிய மருத்துவ சான்றிதழை காண்பித்து விமானத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கும், வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications