ஓய்வை அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். இதனா் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

23 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்த ரொனால்டோவுக்கு தற்போது 41 வயதாகிறது. இந்நிலையில் இனி சர்வதேச போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

Cristiano Ronaldo

தனது ஓய்வு குறித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ சோஷியல் மீடியாவில் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

வீடியோவில், "இன்று தேசிய அணியுடன் மைதானத்தில் எனது பயணம் முடிவுக்கு வருகிறது. நான் போர்ச்சுக்கலுக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன் என்ற மன நிம்மதியுடனும், நான் நடந்த பாதையை எண்ணி பெருமையுடனும், தலைநிமிர்ந்தபடி வெளியேறுகிறேன். 7ம் நம்பர் சட்டை அப்படியே இருக்கும். அதை அணிந்த பெருமை எப்போதும் எனக்குரியது. போர்ச்சுக்கல் எப்போதும் எனக்குள் இருக்கும்" என்று அவர் தனது வீடியோவில் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.

போர்ச்சுக்கல் அணியின் தலைமை பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதலே இந்த திடீர் ஓய்வுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. நார்வே அணிக்கு எதிரான நேஷனல் லீக் போட்டியின் போது, ரொனால்டோ மாற்று வீரர்களின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். போட்டிக்கு முன்பாக தனக்கு 30 நிமிடங்கள் விளையாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்துவிட்டு, பின்னர் பயிற்சியாளர் ஜீசஸ் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக ரொனால்டோ குற்றம் சாட்டினார். இது நம்பிக்கை துரோகம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்த மோதலை தொடர்ந்து, டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே ரொனால்டோ போர்ச்சுக்கல் அணையின் பயிற்சி முகாமிலிருந்து தன்னிச்சையாக வெளியேறினார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

ரொனால்டோவின் வரலாறு

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, சர்வதேச போட்டிகளில் பல உலக சாதனைகளுடன் விடைபெறுகிறார். மொத்தம் 234 சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக அளவில் ஆண்களுக்கான கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 146 கோல்களை அடித்து.. உலகிலேயே ஆண்களுக்கான சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்த வீரராக திகழ்கிறார்.

இவர் 2016ல் போர்ச்சுக்கல் அணிக்கு அதன் முதல் யூரோ கோப்பையை வென்று தந்தார். 2019 மற்றும் 2025ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் அணிய நேஷனல் லீக் கோப்பைகளை வெல்ல கேப்டனாகவும், முக்கிய வீரராகவும் வழி நடத்தினார்.

2026-ல் நடைபெற்ற உலககோப்பை போட்டியில் கோல் அடித்ததன் மூலம், ஆறு வெவ்வேறு உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். இதுவரை மொத்தமாக அவர் விளையாடிய போட்டியில் 979 கோல்களை அடித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்.. கிளப் கால்பந்தில் அல் நசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 1,000 கோல்களை அடிப்பதே இலக்கு என்று கூறியிருக்கிறார்.

கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்களில் எனில் ஒன்று மெஸ்ஸி, இன்னொன்று ரொனால்டோ. மெஸ்ஸி சமீபத்தில்தான் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது ரொனால்டோவும் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+