பொய் சொன்னாரா? எலான் மஸ்க்.. போட்டு உடைத்த முன்னாள் ஊழியர்.. என்ன தான் நடக்குது?
வாஷிங்டன்: இணையத்தில் அதிகப்படியான கிளிக் டிரைவராக ட்விட்டர்தான் இருப்பதாக எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில் கூறியிருந்தநிலையில், இது 100 சதவீதம் பொய் என ட்விட்டர் முன்னாள் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் பல லட்சம் கோடிகளை கொட்டி கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அதாவது 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கியிருந்தார். ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எலான் மஸ்க்.

திவால் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறி
மேலும் எலான் மஸ்க் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார். 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம், சலுகைகள் ரத்து என எலான் மஸ்க் எடுத்து வரும் ஒவ்வொரு அடியும் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எதிர்வரும் பொருளாதார சிக்கலை சமாளிக்க வருவாயை பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும்.. அப்படி செய்யாத பட்சத்தில் ட்விட்டர் திவால் ஆக வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது.

ட்விட்டர் தான் முன்னணி
இதற்காக புளு டிக் வசதிக்காக கட்டண முறையையும் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். போலி கணக்குகள் அதிகரித்து இருப்பதால் தற்போது இதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறார். இதனிடையே, பிற இணையதளங்களுக்கு இணைய பயன்பாட்டாளர்களை கொண்டு செல்வதில் ட்விட்டர்தான் முன்னணி வகிப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

திட்டவட்டமாக மறுப்பு
இணையத்தில் அதிகப்படியாக கிளிக் டிரைவராக ட்விட்டர்தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில் கூறியிருந்தார். ஆனால், எலான் மஸ்க்கின் இந்த கூற்றை ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் திட்டவட்டமாக மறுத்துஇருக்கிறார். இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான Claire Diaz-Ortiz- என்பவர் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

இது 100 சதவீதம் பொய்
"நான் ட்விட்டரில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். சமூக வலைத்தள மார்க்கெட்டிங் தொடர்பாக 2 புத்தகங்களையும் எழுதியுள்ளேன். இது(எலான் மஸ்க் கூறியது) 100 சதவீதம் பொய். இது ட்விட்டருக்கும் தெரியும். பேஸ்புக், லிங்ட் இன் ஆகியவற்றை விட மிகவும் குறைந்த டிராபிக் கொண்டதாகத்தான் ட்விட்டர் உள்ளது" என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications