வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் மிகவும் நன்றாக உள்ளேன்".. 48 மணிநேரம் ஆபத்தான கட்டம் என செய்தி வெளியான நிலையில் டிரம்ப் ட்வீட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் தற்போது மிகவும் நன்றாக உள்ளேன். விரைவில் திரும்பி வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் அவரது மனைவி மெலானியா டிரம்பிற்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டு அதில் தொற்று உறுதியானது.

இதையடுத்து இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உடல்நலம் குறித்து டிரம்ப் நேற்று இரவு ட்விட்டரில் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

டிரம்ப் உடல் நிலை.. அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது.. பரபரப்பு தகவல் டிரம்ப் உடல் நிலை.. அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது.. பரபரப்பு தகவல்

அமெரிக்கா

அமெரிக்கா

அதில் அவர் கூறுகையில் டாக்டர்கள், நர்ஸுகள் உள்ளிட்டோர் நல்ல சிகிச்சையை கொடுக்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடுவதில் வானலாவிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர். அவர்களின் உதவியால் நான் நன்றாக இருக்கிறேன். நமது அமெரிக்காவுக்கு ஊக்கம் தேவை.

சிரமம்

சிரமம்

அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள். நன்றி. எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நன்றிகளும் அன்புகளும்! என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் மூச்சுவிட சிரமப்படுகிறார் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 ராணுவ மருத்துவமனை

ராணுவ மருத்துவமனை

4 நிமிடங்கள் அடங்கிய ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் முதல் 18 வினாடிகள் ஏற்கெனவே வெள்ளை மாளிகையில் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் அவர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக இருக்கிறார். அமெரிக்க கொடி இருந்த ஒரு டேபிளின் முன்பு பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில் வெள்ளிக்கிழமை நான் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு வந்த போது நன்றாக இல்லை.

உண்மை

உண்மை

ஆனால் இப்போது நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். அமெரிக்க மக்களின் நலன்களுக்காக விரைவில் திரும்பி வருவேன். தேர்தல் பிரசாரத்தை விரைந்து முடிக்க விரும்புகிறேன். அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனை என நான் நினைக்கிறேன். அடுத்த சில நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என அந்த வீடியோவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 48 மணி நேரம்

48 மணி நேரம்

இந்த நிலையில் வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய இருவரும் டிரம்ப் மூச்சுவிட மிகவும் சிரமப்படுகிறார். அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அது போல் அடுத்த 48 மணி நேரம் டொனால்ட் டிரம்பிற்கு மிகவும் அபாயகரமான கட்டம். அவரை மீட்பது எப்படி என்பது தெரியவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

தகவல்கள்

தகவல்கள்

டிரம்பின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் சனிக்கிழமை கூறுகையில் டொனால்ட் டிரம்பிற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை என்றனர். டிரம்பிற்கு ஆக்ஸிஜன் தேவையே இல்லை என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும் தகவல்களை கூற அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

English summary
Donald Trump says in his tweet that he is feeling better now and will be back soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X