இனிமே 24 மணி நேரம் இல்லை? ''திடீரென வேகமாக சுழலும் பூமி''.. விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இயல்பை விட பூமியின் சுழலும் வேகம் அதிகரித்துள்ளதால் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

சூரியக்குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இதில் 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன.

சூரியக்குடும்பத்தில் 3-வது கோளான பூமியும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. குறிப்பாக பூமி சூரியனை முழுவதுமாக ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

 சுழலும் வேகம் அதிகரிப்பு

சுழலும் வேகம் அதிகரிப்பு

தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பூமியில் 12 மணி நேரம் இரவும் 12 மணி நேரம் பகலும் ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி அன்று பூமி இயல்பை விட வேகமாக சுழன்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் பூமி இதுபோல வேகமாக சுழலுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இது போல பல முறை பூமி வேகமாக சுழன்று இருப்பது அணுக்கடிகாரங்கள் மூலம் தெரியவந்து இருக்கிறது. இருப்பினும், பூமியின் சுழலும் வேகம் சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குறுகிய மாதம்

குறுகிய மாதம்

கடந்த 2020 ஆம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. அந்த ஆண்டின் மிகக்குறைந்த நாளாக ஜூலை 19 ஆம் தேதி பதிவானது. ஒருநாளில் அதாவது 24 மணி நேரத்திற்கு குறைவாக 1.47 மில்லி செகண்டுகள் பதிவானது. அடுத்த ஆண்டு, பூமி பொதுவாக அதிகரித்த வேகத்தில் சுழன்றது. எனினும் எந்த குறிப்பிடத்தக்க மாற்றமும் பதிவாகவில்லை. அதன்பிறகு கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமியானது வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்து உள்ளது. வரும் ஆண்டுகளில் இதுபோல பல குறுகிய நாட்கள் பதிவாகலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்ட்ரெஸ்டிங் இன்ஜினியரிங் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, குறுகிய நாட்களுக்கான 50 ஆண்டு காலகட்டம் பூமியில் தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

 பூமி இப்படி வேகமாக சுழலுவது ஏன்?

பூமி இப்படி வேகமாக சுழலுவது ஏன்?

பூமியின் சுழலும் வேகம் அதிகரிக்கிறது என்பதை புரிந்து கொள்ள உறுதியான ஆதாரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. எனினும், இதற்கான காரணங்கள் என சமீப நாட்களாக சில தகவல்கள் உலா வருகின்றன. அது என்னவென்று பார்த்தால், 'பனிப்பாறைகள் உருகுவதால் துருவப்பகுதிகளின் எடை குறைந்து இருக்கலாம் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதேபோல் பூமியின் உட்புற பகுதியில் இருக்கும் உருகிய மையமானது காலப்போக்கில் நகர்கிறது என்பதும் ஒருவாதமாக உள்ளது.

 விளைவுகள் என்னவாக இருக்கும்?

விளைவுகள் என்னவாக இருக்கும்?

பூமியின் சுழலும் வேகம் அதிகரிப்புக்கு நில அதிர்வுகள்கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் சில விஞ்ஞானிகள் பார்வையாக உள்ளது. மேலும் சிலரோ சாண்ட்லர் தள்ளாட்டம் எனப்படும் பூமி அதன் அச்சில் சுழலும் போது அட்சரேகையில் ஏற்படும் நகர்வு என்று சொல்கின்றனர். பூமி வேகமாக சுழலுவது அதன் அணுக்கடிகாரங்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த அணுக்கடிகாரங்களே ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.

 திடீர் டைம் ஜம்ப்

திடீர் டைம் ஜம்ப்

ஐன்ஸ்டின் கூற்றுப்படி, சரி செய்யப்படாவிட்டால் அது பயனற்றதாகிவிடும் என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது. இதையும் தாண்டி ஸ்மார்ட் போன், கணிணி உள்பட பிற தொலைத்தொடர்பு சாதனங்கள் நெட்வொர்க் டைம் புரோட்டோகால் (NTP) அமைப்புடன் ஒருங்கிணைந்து(synchronised) செயல்படுவதால் நேர கணக்கீட்டில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடிகாரம் 23:59:59 இலிருந்து 23:59:60 வந்த பின்னர் தான், 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். இதனால், பூமியின் சுழலும் வேகத்தால் நேரத்தில் செய்ய வேண்டிய திடீர் டைம் ஜம்ப், ஐடி புரோகிராம்கள் மற்றும் டேட்டாக்களை கரப்ட் செய்யவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+