ப்ளூ டிக் கட்டணம்? உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம்! 8 டாலர் ஓகேவா? பேரம் பேசிய எலான் மஸ்க்!
வாஷிங்டன் : ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதற்கு அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்த நிலையில் 8 டாலர் ஓகேவா? என ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மாஸ்க் கமெண்ட் செய்திருக்கிறார்.
புலி வருது புலி வருது கதையாக நீண்ட காலமாக ட்விட்டர் பயனாளர்களையும் உலக அளவிலான அரசியல், பொருளாதார பார்வையாளர்களையும் பதட்டத்தில் வைத்திருந்த ட்விட்டர் டீல் முடிந்திருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் அதனை வாங்கப் போவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலக அளவில் மிக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கூறி இருந்தார்.

எலான் மஸ்க்
இதனால் ட்விட்டரில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இப்போது அப்போது என டீல் முடியாமல் இழுபறியாகவே இருந்தது. இதை அடுத்து நீதிமன்ற வழக்கு வரை சென்ற நிலையில் தற்போது ஒருவழியாக ட்விட்டரை வாங்கி இருக்கிறார் எலான் மஸ்க்.

அடுத்தடுத்து அதிரடி
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய கையோடு எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார். அந்நிறுவனம் கைக்கு வந்த உடனேயே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட அதிகாரி விஜயா கட்டே ஆகியோரை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

நேரடி கட்டுப்பாடு
அதோடு ஒட்டுமொத்தமாக நிர்வாக குழுவையும் நீக்கிவிட்டு எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் மென்பொறியாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ப்ளூ டிக்குக்கு கட்டணம்
இதனிடையே தற்போது மேலும் ஒரு அதிரடியை கையில் எடுத்திருக்கிறார் எலான். நிறுவனத்தில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும் இது அதிகாரப்பூர்வ கணக்காக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் ப்ளூ டிக் கணக்குகளுக்கு 20 டாலர் கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அமெரிக்க எழுத்தாளரான ஸ்டீபன் கிங் கடுமையாக விமர்சித்து இருந்தார. இதை அடுத்து அவரது பதிவுக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் 'நாங்களும் பில் கட்ட வேண்டும் அல்லவா! ட்விட்டர் முழுவதுமாக விளம்பரதாரர்களையே நம்பி இருக்க முடியாது! எட்டு டாலர் என்றால் ஓகேவா" என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் இந்த நடவடிக்கை போலி கணக்குகளை தோற்கடிக்க உதவும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications