'டைட்டானிக் பட ஸ்டைல்' நடுக்கடலில் புரபோஸ்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. ஒரே காமெடிதான் போங்க
வாஷிங்டன்: கடலில் வைத்து காதலை சொல்ல திட்டமிட்ட இளைஞருக்கு, தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் போது நடந்த சம்பவம் வாழ்நாளிலேயே மறக்க முடியாத அளவுக்கு சுவாரசியமானதாக மாறியுள்ளது.
காதல் கைகூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அத்தகைய தருணத்தை மறக்க முடியாத நிகழ்வாக அமைக்க வேண்டும் என்பது பல காதலர்களின் திட்டமாக இருக்கும்.
இதற்காக புரபோஸ் செய்வதை வித்தியாசமாக செய்து தங்கள் மனதில் நீங்கா நினைவுகளாக இடம் பெற செய்ய வேண்டும் என்று வித விதமாக காதலர்கள் திட்டமிடுவர்.

காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த
கிரிக்கெட் போட்டிகளின் மைதானத்தில் காதலை சொல்வது.... பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவது... என இன்றைய தலைமுறையினர் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோலத்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞரான ஸ்காட் கிளைன் என்பவர் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டார்.

டைட்டானிக் பட ரேஞ்சுக்கு
தனது வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் நிகழ்வு அமைய வேண்டும் என்று திட்டமிட்ட ஸ்காட்ச் கிளைன்னுக்கு ஒரு ஐடியா தோன்றியது. டைட்டானிக் பட ரேஞ்சுக்கு யோசித்த ஸ்காட் கிளைன், தனது காதலை கடல் பயணத்தின் போது வெளிப்படுத்த திட்டமிட்டார். இதற்காக கடலில் சொகுசு படகில் ஒன்றில் தனது நண்பர்கள் சிலருடன் ஸ்காட் கிளைன் பயணித்தார்.

லவ் புரோபசல்
இதே படகில் தான் அவருடைய கேர்ள் பிரண்ட் சுசி டக்கரும் இருந்தார். இருவரும் கடல் அழகை சிறிது நேரம் ரசித்த பிறகு காதலை புரோபஸ் செய்ய கிளைன் தயாரானார். தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ரிங் (மோதிரம்)-கை கையில் வைத்துக்கொண்டு முழங்கால் இட்டு லவ் புரோபசலுக்கு தயரானார். அப்போது பின்புறமாக கையில் வைத்திருந்த ரிங், கடலில் தவறி விழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கிளைன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் கடலில் குதித்தார்.

மறக்க முடியாத அனுபவமாக
அவரது அதிர்ஷ்டம் படகின் அடுக்கு ஒன்றில் மோதிரம் இருந்த பாக்ஸ் தட்டி வேகமாக கீழே செல்லாமல் இருந்தது. இதனால், எளிதாக மோதிரம் இருந்த பாக்ஸை மீட்டு விட்டார். படகில் இருந்த சக நண்பர்களும் அவருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டனர். மறக்க முடியாத படி காதலை சொல்ல நினைத்த கிளைனுக்கு கடைசியில் அவர் நினைத்தாலும் மறக்க முடியாத அளவுக்கான ஒரு சம்பவம் நடைபெற்று விட்டதாக அங்கிருந்த நண்பர்கள் கலாய்த்துள்ளனர்.

100 சதவீதம் எனது அதிர்ஷ்டம்
இது குறித்த வீடியோவை தனது பேஸ்புக்கில் கிளைன் பகிர்ந்து இருக்கிறார். 1.5 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவிற்கு 'இது 100 சதவீதம் உண்மை, 100 சதவீதம் எனது அதிர்ஷ்டம், 100 சதவீதம் ஒருபோதும் மறக்கப்போவது இல்லை' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து இருக்கிறார். இவரது பதிவினை பார்வையிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டு வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications