வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100 கோடி தடுப்பூசி..சீனா ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை.. முதல் குவாட் மாநாட்டிலேயே மாஸ் காட்டிய பைடன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: குவாட் மாநாட்டில் சர்வதேச நலன் கருதி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் இதில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அனைத்து நாடுகளுக்கும் மகிழ்ச்சி என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து குவாட் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. குவாட் கூட்டமைப்பு நாடுகள் மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின்னர், நடைபெறும் முதல் குவாட் மாநாடு என்பதால் இதன் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

100 கோடி தடுப்பூசி

100 கோடி தடுப்பூசி

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பதில் சீனா மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதை முறியடிக்கும் நோக்கில் இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய குவாட் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்குத் தேவையான நிதியுதவியை அமெரிக்காவும் சீனாவும் வழங்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்நிலையில், குவாட் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்றதாகவும் இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். மேலும், உலகில் ஒரு சில நாடுகளின் ஆதிக்கத்தைத் தடுக்க ஒத்த கருத்துள்ள நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார்.

சிறப்பு நாடுகள் இல்லை

சிறப்பு நாடுகள் இல்லை

இந்த குவாட் மாநாட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. முன்னதாக குவாட் மாநாட்டின்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் விவதாகிக்கப்பட்டன. குவாட் நாடுகளுக்குச் சிறப்பு நாடுகளாக தங்களைக் கருதிக் கொள்வதில்லை என்றும் மற்ற நாடுகளின் நலனிற்காக குவாட் நாடுகள் உழைப்பதாகவும் இதில் கலந்துகொண்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதில்லை. இதனால் கொரோனா பரவல் அதிகரித்து, உயிரிழப்புகள் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க ஆசிய பசிபிக் நாடுகளுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக விநியோகிக்க குவாட் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

English summary
Joe Biden about his first Quad summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X