மிகப்பெரிய வெற்றி பெற்ற விஜய்.. தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை கருத்து
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மற்றும் சீமான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தனித்து போட்டியிட்ட விஜய் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். களம் கண்ட முதல் தேர்தலிலேயே விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் 33.5 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், விஜய் அதைவிட கூடுதலாக அதாவது 34.8 சதவீத வாக்குகளை தாண்டியுள்ளார். இதனால் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களின் தீர்ப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். என் மண்ணின் மக்கள் ஒரே குரலில் எழுந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பணம் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு இல்லை.
குடும்ப அரசியலுக்கு இல்லை. அரசியலில் தலைமுறை மாற்றத்திற்கு. தவெக மற்றும் விஜய்க்கு வாழ்த்துகளும், நல்வாழ்த்துகளும். நீங்கள் நினைத்ததை சாதிக்க இறைவன் துணை நிற்கட்டும். மேலும், அனைத்து தேசிய ஜனநாயக வேட்பாளர்களுக்கும் வாழ்த்து கூறுகிறேன். களத்தில் கடுமையான போட்டி நிலவியது.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்; வெற்றி பெற முடியாதவர்களும் தொடர்ந்து போராடுவோம். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மற்றும் சீமான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். கடைசியாக மிக முக்கியமாக, களத்தில் கடுமையாக உழைத்த தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு என் நன்றிகள். நல்ல காலம் விரைவில் வரும்! என்று பதிவிட்டுள்ளார்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications