விஜய் ஜெயித்தது ஓகே.. ஆனால் இனிதான் திமுக எவ்வளவு டேஞ்சர்னு தெரியும்.. ஜூலி வீடியோ
சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜூலி மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பிக் பாஸ் ஜூலி வீடியோ
விஜய் வெற்றி பெற முடியாது என்று முன்பு பலமுறை கருத்து தெரிவித்திருந்த ஜூலி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்தது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை தேடி விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பிய நிலையில், ஜூலி தன்னுடைய பதிலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜூலி கூறியதாவது, "எல்லோரும் என்னை தேடிக்கொண்டே இருந்தீங்க... நான் எங்கேயும் போகவில்லை, இங்கே தான் இருக்கிறேன். நான் உங்களுடைய வெற்றியை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் புரியல... அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது, நிரந்தர தோல்வியும் கிடையாது. இது ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க DMK காரங்க. இந்த ஒரு விஷயத்துக்காக எல்லாம் நாங்க துவண்டு போவோம்னு நினைக்காதீங்க.
ஜூலி சவால்
நாங்க ஜெயித்து உட்கார்ந்ததை விட ஆப்போசிட்ல உட்கார்ந்தது தான் ஜாஸ்தி. நீங்க இப்பதானே ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க. ஆப்போசிட்ல திமுக உட்காரும்போது எவ்வளவு டேஞ்சரஸ்ன்னு இனிதான் உங்களுக்கு புரிய போகுது. நாங்க சண்டை செஞ்சே பழகுனவங்க... வாங்க இனி சண்டை செய்யலாம். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது." கொஞ்சி பேசி இருக்கிறார்
இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒருபுறம், ஜூலி அரசியல் அனுபவத்தை சுட்டிக்காட்டி பேசியதாக சிலர் ஆதரிக்கின்றனர். மற்றொரு புறம், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் இவ்வாறு சவால் விடும் வகையில் பேசியது தேவையற்றது என விமர்சனங்களும் எழுந்துள்ளன.
விஜய் பற்றிய விமர்சனங்கள்
முன்னதாகவும் ஜூலி, விஜயின் அரசியல் வருகையை குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தார். "திரை உலகில் வெற்றி பெற்றதாலே அரசியலிலும் அதே வெற்றி கிடைக்கும் என்று யாரும் நினைக்கக் கூடாது" என்ற கருத்தை பல்வேறு நேரங்களில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும், மக்கள் மனநிலை, நிலைமைகள், தரை மட்ட அரசியல் ஆகியவை மிகவும் வேறுபட்டவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2026 தேர்தல் முடிவுகள்
இந்நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில் அவர் முன்னிலையில் இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் இந்த வெற்றி நீடிப்பதா என்பது குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மொத்தத்தில், ஜூலியின் இந்த வீடியோ தற்போதைய அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் இறுதியாக அறிவிக்கப்படும் வரை இத்தகைய கருத்து மோதல்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
சோ.. இவங்க வேற! மகளிரணிக்கு மருத்துவமனையில் என்னங்க வேலை! தேனி தவெகவில் ரீல்ஸ் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications