ஆப்கான் விமான தளத்தை கைப்பற்றி.. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை தூண்டிவிட சீனா சதி..பரபரப்பு தகவல்!
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது என்றும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்த முயற்சி செய்கிறது என்றும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான அவசர முடிவுக்குப் பிறகு அமெரிக்க கூட்டாளிகளின் நம்பிக்கையை அதிபர் ஜோ பைடன் இழந்து விட்டார்.

பல சவால்கள்
அமெரிக்காவிற்கு முன்னால் இப்போது பல சவால்கள் இருக்கின்றன. அமெரிக்கர்கள் பாதுகாக்கப்படுவதையும், நாட்டின் இணைய பாதுகாப்பு வலுவாக இருப்பதையும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷ்யா போன்று நடிக்கும் நாடுகள் நம்மை தொடர்ந்து ஹேக் செய்யப் போகிறார்கள். ஏனென்றால் நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

சீனாவின் செயல்
நாம் சீனாவைப் கூர்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் ஆப்கானிஸ்தான் பாக்ராம் விமானப்படைத் தளத்தை நோக்கி சீனா நகர்வு மேற்கொள்வதை நீங்கள் பார்க்கலாம். அந்த விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு எதிராக வலிமை பெற சீனா முயற்சி செய்கிறது. எனவே நமக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. தற்போது அதிபர் ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன. நமது கூட்டாளிகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும்.

இந்தியா ஆதரவு உள்ளதா?
சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை மற்றவர்களிடம் உறுதிப்படுத்த வேண்டும். பைடன் செய்ய வேண்டிய முதல் விஷயம். நமது கூட்டாளி நாடுகள் தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் சரி அவர்களுடைய ஆதரவு நமக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.ஏனெனில் அவர்களின் ஆதரவு நமக்கு தேவையாக இருக்கிறது.

ஜோ பைடன்
இரண்டாவதாக, உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை நாம் மேற்கொள்ளப் போகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் ஆப்கானில் தாலிபான்கள் வந்துவிட்டதால் உலகம் முழுவதும் பயங்கரவாதம் வளர்ச்சி அடைவதை நாம் பார்க்க வேண்டியது இருக்கும். இதற்காக பயங்கரவாத எதிர்ப்பு முயற்சி நமக்கு மிக முக்கியம். ஆப்கானில் இருந்து வெளியேறியதன் மூலம் இராணுவத்தின் ஒவ்வொரு வீரர் மற்றும் இராணுவக் குடும்பங்களின் நம்பிக்கையையும் ஜோ பைடன் இழந்துவிட்டார். நம்மிடம் மட்டுமில்லாமல் இப்போது பேச்சுவார்த்தை நடத்தும் நமது கூட்டாளிகளின் நம்பிக்கையையும் அவர் இழந்து விட்டார்.

மக்களின் நம்பிக்கை
நாம் இப்போது என்ன செய்ய போகிறோம் என்பது நமக்கு தெரிவியவில்லை. பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஜிஹாதிகளுக்கு(தாலிபான்கள்) வழங்கி விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி இருக்கின்றன. ஜிஹாதிகள் இதை நகரத்தில் கொண்டாடி வருகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக ஜோ பைடன் இழந்து விட்டார். இவ்வாறு நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications