தவெக, திமுக, அதிமுக.. ஒரு தொகுதியில் கூட வெல்லாத மாவட்டங்கள்
சென்னை: தவெக, திமுக, அதிமுக ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெல்லாத மாவட்டங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். திமுகவை பொறுத்தரை சென்னை மண்டலம் அவரை மொத்தமாக கைவிட்டுள்ளது. கடந்த முறை ஆட்சி அமைக்க காரணமான சென்னை மண்டலத்தில் சென்னையில் இரண்டு தொகுதியில் தான் ஜெயித்துள்ளது. மற்றபடி திருவள்ளூரில் 10, சென்னையில் 14, செங்கல்பட்டில் ஏழு, காஞ்சிபுரத்தில் நான்கு என மொத்தமாக 31 தொகுதிகளை திமுக இழந்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை சென்னையில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.. 11 மாவட்டங்களில் கணக்கை தொடங்கவில்லை.. தவெக 8 மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை.
அப்படி இருந்தும் தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. தவெகவிற்கு சென்னை, செங்கல்பட்டு ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்கள் கைகொடுத்துள்ளன. அதிமுகவிற்கு வட மாவட்டங்களே பல கை கொடுத்துள்ளன.திமுகவிற்கும் வட மாவட்டங்கள் மற்றும் கணிசமான தென்மாவட்டங்கள் கைகொடுத்துள்ளன. பட்டியலை பாருங்கள்

திமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள :
1,செங்கல்பட்டு -7-0
2,தர்மபுரி -5-0
3,ஈரோடு- 8-0
4,காஞ்சிபுரம் -4-0
5,நாமக்கல் -6-0
6,ராணிப்பேட்டை -4-0
7,சேலம்-11-0
8,திருவள்ளூர் -10-0
9,வேலூர்-5-0
10.சிவகங்கை -4-0
அதிமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,சென்னை-16-0
2, காஞ்சிபுரம் -4-0
3,மதுரை-10-0
4, மயிலாடுதுறை 3-0
5,பெரம்பலூர்-2-0
6, இராமநாதபுரம் -4-0
7, சிவகங்கை -4-0
8, தஞ்சாவூர் -8-0
9,தேனி-4-0
10, தூத்துக்குடி -6-0
11, விருதுநகர் -7-0
தவெக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,அரியலூர்-2-0
2, கன்யாகுமரி -6-0
3, நாகப்பட்டினம் -3-0
4,தென்காசி-5-0
5, நீலகிரி -3-0
6, திருவாரூர் -4-0
7, விழுப்புரம் -7-0
8, மயிலாடுதுறை -3-0
இதில் தவெகவை பொறுத்தவரை காவிரி டெல்டா மாவட்டங்களான அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும், தெற்கே கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. வட மாவட்டத்தை எடுத்தால் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெறவில்லை. எனினும் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றுள்ளதால் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.














Click it and Unblock the Notifications