வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சத்தில் கொரோனா: அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நிலைமை மோசம்.. பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்காவில் 56,282 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 56,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு

கொரோனா அதிகரிப்பு

உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 128,223,639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 2,803,953 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 103,428,463 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆதிக்கம்

அமெரிக்காவில் ஆதிக்கம்

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 56,282 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 629 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 42,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,969 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் நிலை மோசம்

இந்தியாவின் நிலை மோசம்

இந்தியாவில் முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 56,119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 266 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 542,353 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 4,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர்.

பிரான்சில் உயிரிழப்பு

பிரான்சில் உயிரிழப்பு

பிரான்சில் 9,094 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் 360 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 12,916 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 417 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,711 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் 293 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
Globally, corona exposure is higher in India than in the United States
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X