இப்படியா பண்ணுவீங்க.. இண்டர்வியூ செய்து கொண்டிருந்த போதே பணி நீக்கம்.. HR-க்கு ஷாக் கொடுத்த கூகுள்
ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய எச்.ஆர் ஒருவரை இண்டர்வியூ செய்து கொண்டிருந்த போதே பணி நீக்கம் செய்து கூகுள் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
வாஷிங்டன்: பொருளாதார மந்தநிலை அச்சத்தால் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் லே ஆஃப் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனம் ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய எச்.ஆர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளது. அதுவும் இண்டர்வியூ செய்து கொண்டிருந்த போதே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன் - ரஷியா போர் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எச்சரித்து இருந்தது.

பொருளாதார நிலைத்தன்மை
பொருளாதார மந்த நிலை எச்சரிக்கைக்கு மத்தியில் பல நாடுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை என்பது நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் பெரிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கின. இதனை ஈடுகட்டும் விதமாக பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. செலவினங்களை குறைக்கவும், பொருளாதார இழப்பை சரிசெய்யும் வகையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

பணிநீக்க நடவடிக்கை
கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்காமல் இல்லை. ஊழியர்கள், அதிகாரிகள் எந்த வித முன்னறிவிப்பு இன்றியும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். அமெரிக்காவில் ஐடி சார்ந்த நிறுவனங்களில் செய்யப்படும் பணி நீக்க நடவடிக்கையால் இந்தியர்களே பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. கூகுள் நிறுவனம் மட்டும் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும்.

எச் ஆர்-ஐயே நீக்கிய கூகுள்
இப்படி பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த பல ஊழியர்களும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாகவே வேலை இழந்த ஊழியர்களின் அனுபவங்கள் குறித்த பதிவுகள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு பிரிவில் எச்.ஆர் ஆக பணியாற்றிய அதிகாரி ஒருவரையே கூகுள் தடாலடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

எனது மகிழ்ச்சி நீடிக்கவில்லை
அந்த வகையில், கூகுள் நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய எச்.ஆர் ஒருவரையே கூகுள் நிறுவனம் அதிரடியாக கழற்றி விட்டு இருக்கிறது. இது குறித்த ரியான் என்பவர் தனது லிங்ட் இன் பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது:- நான் ஒரு ஆண்டிற்கு முன்னால் பெரும் கனவுகளுடன் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆனாலும் எனது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இண்டர்வியூ கால் ஒன்றில் இருக்கும் போதே எனது கணினி திடீரென முடங்கியது.

சங்டமான நிலையில் சிக்கியிருக்கிறேன்
இப்படி தடாலடியாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவாரத்திற்கு முன்புதான் எனது பணி ஒப்பந்தம் ஓரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு இருந்தது. கூகுளின் கிளவுட் சேல்ஸ் ஆள்சேர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தேன். கடந்த வாரம் கூட ஊதிய உயர்வு குறித்த பேச்சுக்கள் ஓடியது. ஆனால் இப்படி ஒரு சங்டமான நிலையில் தற்போது சிக்கியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications