நாம் ஏன் "இதை" பற்றி பேசவில்லை?.. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகை ட்வீட்!
வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என ஹாலிவுட் நடிகை ரிஹான்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் சுமுக முடிவுகள் எட்டப்படவில்லை.
இதையடுத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க குடியரசுத் தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்போது எல்லைகள் மூடப்பட்ட டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீஸார் கலைக்க முற்பட்டனர்.

இணையதள சேவை
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் டெல்லியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவையை துண்டித்துவிட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ ஆதரவு தெரிவித்திருந்தார். அது போல் தற்போது ஹாலிவுட் நடிகை ரிஹான்னாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
|
போராட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தால் இந்தியாவில் தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது என்ற செய்தியை மேற்கோள்காட்டி ரிஹான்னா ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் அவர் "இது குறித்து நாம் ஏன் பேசவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஹான்னா
விவசாயிகளுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகையின் இந்த ட்வீட் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது ட்விட் வைரலாகி வருகிறது. சிலர் ரிஹான்னாவின் கருத்தை ஆதரிக்கிறார்கள். மற்ற சிலரோ மற்ற நாடுகளின் விவகாரங்கள் குறித்து ரிஹான்னா பேசக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பாப் பாடகி
ஹாலிவுட் நடிகை, பாப் பாடகி என்ற பன்முக திறமைகளை கொண்ட ரிஹான்னாவுக்கு டிவிட்டரில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளார்கள். Dont Stop the music, Love the way you lie, Umbrella உள்ளிட்டவை ரிஹான்னாவின் ஆல்பம்கள் ஆகும். அது போல் Ocean's 8, battleship உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications