அந்த கடவுளே நான்தான்.. டிரம்ப் போட்ட ஒற்றை போஸ்ட்! சோஷியல் மீடியாவில் பற்றிய தீ!
வாஷிங்டன்: போப்பாண்டவருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. அது சரி டிரம்புக்கு யார் கூடத்தான் சர்ச்சை இல்லாமல் இருக்கிறது? தற்போது போப்பாண்டவரை விமர்சிக்கும் வகையில் டிரம்ப் போட்டிருக்கும் சோஷியல் மீடியா போஸ்ட் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர், தன்னை ஒரு போப் போல சித்தரித்து ஏஐ படத்தை டிரம்ப் ஷேர் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது மற்றொரு படத்தை பகிர்ந்திருக்கிறார்.

என்ன பஞ்சபயத்து?
ஈரான் போர் குறித்து போப் லியோ தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க-ஈரான் பஞ்சாயத்தை குறிப்பிட்டு, "தன்னிறைவு பெற்றவர்கள் என்கிற மாயைதான் உலக போர்களுக்கு காரணமாகிறது. போர்கள் போதும்" என்று கூறியிருந்தார். இது டிரம்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. போரை நடத்துவது நான்.. அதை நிறுத்த சொல்ல வேண்டியதும் நான்தான். அப்படி இருக்கையில் மூன்றாவது நபர் எப்படி போர் வேண்டாம் என்று சொல்லலாம் என கடுப்பான டிரம்ப், "போப் பலவீனமானவர்" என்று திட்டியிருக்கிறார்.
சகட்டு மேனிக்கு பேசிய டிரம்ப்
"போப் லியோ குற்றங்கள் விஷயத்தில் பலவீனமானவர். வெளியுறவுக் கொள்கையில் பலவீனமானவர். போப் தீவிர தாராளவாதி. அவர் தனது ஆன்மீக பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். போப் லியோ ஒரு அமெரிக்கர் அதனால்தான் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் இடதுசாரி அரசியலுக்கு ஆதரவாக செயல்படுகிறார்" என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருக்கிறார்.
இத்துடன் நிற்காமல், நான்தான் ஏசு ஆண்டவர் என்று சொல்லி, தன்னை ஆண்டவராக சித்தரிக்கும் ஏஐ படத்தையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து பீதியை கிளப்பியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள்
அந்த ஏஐ படத்தில், டிரம்ப் நோயாளி ஒருவரை பார்த்து கையை நீட்டுவதை போலவும், அவரது கையிலிருந்து கிருபை ஒளி தெரிவதை போலவும், தலைக்கு பின்னால் ஒளி வட்டம் தெரிவதை போலவும், பின்னால் போர் விமானங்களும் அமெரிக்க கொடியும் இருப்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டிரம்ப் முதலில் தன்னை ஒரு போப்பாண்டவராக சித்தரித்துக்கொண்டார். இப்போது ஏவு ஆண்டவராகவும் சித்தரித்திருக்கிறார். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ! என்று பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications