வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நோய் எதிர்ப்பு சக்தி ட்வீட்... எச்சரித்த ட்விட்டர்

கொரோனாவில் இருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளா ட்ரம்ப் இந்த பதிவிற்கு ட்விட்டர் சமூக வலைத்தளம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதாகவும் நோயை வென்று நலமுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கொரோனாவிற்கு எதிரானது ட்விட்டர் சமூக இணைய தளம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்று வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து, அதிபர் தேர்தலுக்கான தீவிர பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். தனக்கு நோய் எதிர்ப்பு அதிகரித்து விட்டதாகவும் கூறி வருவதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனாவை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முக கவசம் போடுவதை கூட கிண்டலாக பேசினார். முக கவசம் அணிவதையும் தவிர்த்து வந்த அவர் எதிர்கட்சித்தலைவர் ஜோ பிடனுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். அதற்கடுத்த சில நாட்களில் ட்ரம்பை கொரோனா பாதித்தது.

ட்ரம்பும் அவரது மனைவியும் சில நாட்கள் தனிமையில் இருந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ட்ரம்ப் கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். கொரோனா குணமானதாக கூறினாலும் அவருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த எதிர்கட்சித்தலைவர் ஜோ பிடன் தயாராக இல்லை.

மருத்துவர்கள் அறிக்கை

மருத்துவர்கள் அறிக்கை

ட்ரம்பின் மருத்துவர் டாக்டர் சீன் கான்லி சனிக்கிழமையன்று அதிபருக்கு பரிசோதனையை மேற்கொண்டதாகக் கூறினார்.மேலும் இனி மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து இல்லை என்றும், வைரஸை தீவிரமாக பிரதிபலிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இந்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளது.

ட்விட்டரில் ட்ரம்ப் பதிவு

ட்விட்டரில் ட்ரம்ப் பதிவு

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு பற்றி பதிவிட்டார் ட்ரம்ப். இந்த ட்வீட் பற்றி ட்விட்டர் சமூக வலைதளம் எச்சரிக்கை செய்தியை பதிவிட்டுள்ளது.

இந்த ட்வீட் COVID-19 தொடர்பான தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புவது பற்றிய ட்விட்டர் விதிகளை மீறியது. இருப்பினும், ட்வீட் அணுகக்கூடியதாக இருப்பது பொதுமக்களின் ஆர்வத்தில் இருக்கலாம் என்று ட்விட்டர் தீர்மானித்துள்ளதாக குறிப்ட்டுள்ளது.

நலமாக உள்ளேன்

நலமாக உள்ளேன்

முன்னதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தான் மிகவும் நலமாக உள்ளேன் என்றும், அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள்; ஓட்டுப் போடுங்கள் என்றும் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் பேட்டி

ட்ரம்ப் பேட்டி

கொரோனா கட்டுப்பாட்டை மீறி டிரம்ப் செயல்பட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் ஃபாக்ஸ் நியூஸில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில் பேசிய, ட்ரம்ப் தன்னிடம் கொரோனா தொற்று இல்லை என்றும், இப்போது தான் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்றும் அறிவித்தார்.

அஞ்ச வேண்டாம்

அஞ்ச வேண்டாம்

உங்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு அதிபர் இருக்கிறார் அவர் தனது எதிரியைப் போன்ற மறைக்க வேண்டியதில்லை,என்று அவர் மேலும் கூறினார். கொரோனா வைரஸைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறிக்கொண்டே இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கவலைப்பட வேண்டாமா

கவலைப்பட வேண்டாமா

இந்நிலையில் பிரபல நடிகர் க்றிஸ் எவான்ஸ் அதிபர் ட்ரம்ப்பின் பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். கொரோனா வைரசுக்கு பயப்பட வேண்டாமா? நீங்கள் சிறப்பான மருந்துகளை உட்கொண்டு 24 மணி நேரமும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தீர்கள்.

மக்களுக்கு கிடைக்குமா?

மக்களுக்கு கிடைக்குமா?

உங்களுக்கு கிடைத்த இந்த வசதி எல்லாருக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்த வித்தியாசம் உங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனாலும் உங்களுக்குக் கவலை இல்லை என்றும் சாடியுள்ளார் க்றிஸ் எவான்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Donald J. Trump post his Twitter page, A total and complete sign off from White House Doctors yesterday. That means I can’t get it immune, and can’t give it. Very nice to know.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X