வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் நம்பிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் தாமே வெற்றி பெறுவேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நவம்பர் 3-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. விடமாட்டார் ட்ரம்ப்.. விசித்திர வழக்குகளை சந்திக்கப் போகிறது நீதிமன்றம் அமெரிக்க அதிபர் தேர்தல்.. விடமாட்டார் ட்ரம்ப்.. விசித்திர வழக்குகளை சந்திக்கப் போகிறது நீதிமன்றம்

வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்

வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்

அதிபர் தேர்தலில் 538 தேர்தல் சபை உறுப்பினர்கள் அல்லது எலக்ட்டோரல் வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார். தற்போதைய நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளுடன் வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்.குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 214 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

தீர்மானிக்கும் மாகாண வாக்குகள்

தீர்மானிக்கும் மாகாண வாக்குகள்

இன்னமும் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இருவரது வெற்றி தோல்வியை பென்சில்வேனியா, அரிசோனா, நெவாடா , ஜோர்ஜா வாக்குகளே தீர்மானிக்க உள்ளன. இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு வழக்குகளை அதிபர் டிரம்ப் தரப்பு தொடர்ந்துள்ளது.

 டிரம்ப் ட்வீட்

டிரம்ப் ட்வீட்

இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நான் எளிதாக வெல்வேன். சட்டவிரோதமான வாக்குகளை எண்ணினால் எங்களிடம் இருந்து தேர்தல் வெற்றியை அவர்களால் அபகரிக்க முடியாது.பல முக்கியமான மாகாணங்களில் நான் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளேன். வரலாறு காணாத வகையிலான வாக்குகளுடன் வென்றிருக்கிறேன்.

வெற்றியை அபகரிக்க முடியாது

வெற்றியை அபகரிக்க முடியாது

நான் பல மாகாணங்களில் வென்றிருக்கிறேன். ஜோபிடனும் பல மாகாணங்களில் வென்றுள்ளார். இருவருமே பல மாகாணங்களில் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளோம். ஆனால் நீதிபதிகள்தான் முடிவெடுத்து தீர்மானிக்க உள்ளனர். இந்த தேர்தலில் நாங்கள் எளிதாக வெல்வோம் என நினைத்திருந்தோம். ஏராளமான ஆவணங்கள் இருப்பதால் நாங்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்திருக்கிறோம். எங்களிடம் இருந்து தேர்தல் வெற்றியை அபகரிக்க முடியாது. இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

English summary
US President Donald Trump tweets that "If you count the legal vote, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us....I have already decisively won many critical states....We won by historic numbers".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X