ஒன்று.. இரண்டல்ல.. 'அயர்லாந்தில் 50 பேட்டரிகளை விழுங்கிய மூதாட்டி'.. மருத்துவர்கள் மீட்டது எப்படி?
வாஷிங்டன்: அயர்லாந்தில் மன அழுத்தம் காரணமாக மூதாட்டி ஒருவர் கடிகாரம், ரிமோட் போன்றவற்றிற்கு பயன்படுத்தபப்டும் பேட்டரிகளை விழுங்கியுள்ளார். தற்போது அறுவைசிகிச்சை செய்து டாக்டர்கள் அவர் விழுங்க்கிய 51 பேட்டரிகளை எடுத்துள்ளனர்.
நாணயங்கள், கற்களை விழுங்குவது மணல்களை அள்ளி சாப்பிடுவது என ஒரு சிலர் விநோத பழக்கங்களில் ஈடுபட்டு தங்களை துன்புறுத்திக்கொள்கின்றனர்.
மன அழுத்தம் மற்றும் அதனால், ஏற்படும் சில மனநோய்களால் இது போன்ற பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

பேட்டரிகளை விழுங்கிய மூதாட்டி
இந்த நிலையில், அயர்லாந்தில் உள்ள 66-வயது மூதாட்டி ஒருவர் பேட்டரிகளை விழுங்கியிருக்கிறார். அதுவும் ஒன்றல்ல.. இரண்டல்ல.. சுமார் 50 பேட்டரிகளை விழுங்கியிருக்கிறார். கடிகாரம், ரிமோட் போன்றவற்றிற்கு பயன்படுத்தபப்டும் ஏஏ, ஏஏஏ வகை பேட்டரிகளை அந்த மூதாட்டி விழுங்கியிருக்கிறார். தன்னைத்தானே தன்புறுத்திக்கொள்ளும் மனப்பான்மையுடன் பேட்டரிகளை விழுங்கி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அந்த மூதாட்டியை அழைத்து சென்றுள்ளனர்.

இயற்கையான முறையில்
அந்த மூதாட்டிய பரிசோதித்த வின்செண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எக்ஸ்.ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் அந்த வயதான பெண்மணியின் குடல் மற்றும் வயிறு முழுவதும் பேட்டரிகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை செய்து பேட்டரிகளை எடுக்கலாமா? அல்லது இயற்கையான முறையில் வெளியேற மருத்துவ கொடுக்கலாமா? என ஆலோசித்த மருத்துவர்கள் இயற்கையான முறையில் வெளியேறட்டும் என அதற்கான சிகிச்சைகளை கொடுத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கும்
ஒருவார காலத்தில் வெறும் 5 ஏஏ வகை பேட்டரிகளே இயற்கையான முறையில் வெளிவந்துள்ளது. அதன்பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் பல பேட்டரிகள் குடல் மற்றும் வயிறு பகுதிகளில் அப்படியே இருந்துள்ளது. இதனால், அறுவை சிகிச்சை செய்து எடுப்பதே நலம் என்ற முடிவுக்கு வந்த மருத்துவர்கள் வயிற்றில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து 46 பேட்டரிகளை எடுத்துள்ளனர். நல்லவேளையாக பேட்டரிகள் எதுவும் வயிற்றில் இருந்து சேதம் அடையவில்லை. அப்படி எதாவது நடந்திருந்தால் அதில் உள்ள ரசாயனங்கள் உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

55 பேட்டரிகள் எடுக்கபட்டுள்ளது
மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில், பெருங்குடல் பகுதியில் சிக்கியிருந்த எஞ்சிய 4 பேட்டரிகளும் மீட்கப்பட்டு விட்டதாகவும் மொத்தம் 55 பேட்டரிகள் அந்த மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதா தெரிவித்தனர். தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டும் என்றே பேட்டரிகளை விழுங்குவது ஒரு அசாதாரண நிகழ்வு ஆகும் என்றும் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications