வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிந்தது இழுபறி.. அபாரமாக வென்றார் ஜோ பிடன்.. அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 3ம் தேதி முதல் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.

ஜோ பிடன் 290 ஓட்டுகளை பெற்றுள்ளார். அங்கு வெற்றிக்கு தேவை 270 ஓட்டுகள் ஆகும். 20 ஓட்டுகளை கொண்ட பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக இந்திய நேரப்படி நவம்பர் 7ம் தேதி இரவு 10 மணியளவில் அறிவிப்பு வெளியானது. எனவே அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார் ஜோ பிடன். ஜனவரி 20ம் தேதி அவர் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம்... அமைதியாக இருங்கள் - ஜோ பிடன்அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம்... அமைதியாக இருங்கள் - ஜோ பிடன்

Joe Biden has reached the 270 electoral college votes and become President of the US

மேலும் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் துணை அதிபராக பதவியேற்க உள்ளார். ஆம், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவிக்கு வருகிறார். இவரது தாய் பூர்வீகம் தமிழகத்தின் மன்னார்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராகும்.

ஜோ பிடன் மொத்தம் 284 ஓட்டுக்களை பெறுவார் என்று அசோசியேட் பிரஸ் கணித்திருந்தது. ஆனால் அவர் 290 ஓட்டுக்களை பெறுவார் என்று பின்னர் கணிப்பை மாற்றியது. டிரம்ப் ஆதரவு தொலைக்காட்சியாக அறியப்படும், பாக்ஸ் நியூஸ் சேனலும், ஜோ பிடன் 290 இடங்களை வென்றதாக அறிவித்துள்ளது. டிரம்ப் 214 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார்..

பென்சில்வேனியா, விஸ்கான்சின் மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவை அனைத்தும் எந்த பக்கம் சாயும் என்று தெரியாமல் இருந்த மாகாணங்கள் ஆகும். இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்பதாக இல்லை. அவரின் பிரச்சார குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இன்னமும் தேர்தல் முடியவில்லை என்றும், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜோ பிடன் இந்த வெற்றியை வரவேற்றுள்ளார். தான் கௌரவிக்கப் பட்டுள்ளதாகவும் எளிமையாக உணர்வதாகவும் அவர் ட்வீட் வெளியிட்டுள்ளார். நமக்கு முன்னால் இருக்கக்கூடிய வேலை மிகவும் கடுமையானது. ஆனால் அனைத்து அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன். எனக்கு ஓட்டு போட்டிருந்தாலும் போடாவிட்டாலும் சரி அனைவருக்குமான அதிபராக நான் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Joe Biden is the apparent winner of the state of Pennsylvania; set to become the 46th President of the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X