பார்த்துக்கிட்டே இருங்க.. கச்சா எண்ணெய் விலை அப்படியே சரிய போகுது! ஆருடம் சொல்லும் டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் உடனான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிர்ரென உயர்ந்திருக்கிறது. ஆனால், போர் முடிந்தவுடன் பாருங்க.. எண்ணெய் விலை அப்படியே சரியப்போகுதுனு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10% அதிகரித்திருக்கிறது. இருப்பினும் போர் முடிந்தவுடன் பாறை சரிந்து விழுவதை போல.. கச்சா எண்ணெய் விலையும் சரியும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

Trump oil price

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரத்தில் 9.66% அதிகரித்து ஒரு பேரல் ரூ.8,989க்கு விற்பனையாகிறது. WTI கச்சா எண்ணெய் 10.95% அதிகரித்து ரூ.8,646க்கு விற்பனையாகிறது. ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று கூறும் டிரம்ப்.. விரைவில் ஈரான் சமாதான உடன்படிக்கைக்கு வர இருக்கிறது என்றும், இது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஈரானுடனான சண்டை முடிவுக்கு வந்தவுடன் தற்போதைய விலை உயர்வு தற்காலிகமானது என்பதால் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக தற்போது எண்ணெய் தடையின்றி சென்றுக்கொண்டிருக்கிறது என்றும், சர்வதேச கடல் வழிப்பாதைகளை அமெரிக்கா பாதுகாத்து வருவதால் அதற்கான செலவுகளை மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இந்த எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு தேவையான கச்சா எண்ணெயில் பெரும்பான்மையாக நாம் இறக்குமதிதான் செய்கிறோம். இதன் காரணமாக இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 9.92% ஆக அதிகரித்து கிட்டதட்ட 10% -ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 20.05%லிருந்து 22.93% என கடுமையாக அதிகரித்திருக்கிறது.

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 4.82% ஆக உயர்ந்துள்ளது. இதில் கிராமப்புறங்களில் 5.23% ஆகவும், நகர்ப்புறங்களில் 4.31% ஆகவும் பணவீக்கம் உள்ளது. உணவு பணவீக்கமும் 5.95% ஆக அதிகரித்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும் பொருளாதார நிபுணர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர்.

மேற்கு ஆசிய நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால், இந்த மாதம் மொத்த விலை பணவீக்கம் 10.2% ஆக அதிகரிக்கும் என்று 'இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச்' அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் தேவேந்திர பந்த எச்சரித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, பிரச்சனையை டிரம்ப் சரி செய்வார் என்று கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+