பணிநீக்க விவகாரத்தில் தலையிடுகிறது மத்திய அரசு.. அமேசானுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் சம்மன்
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை லே ஆஃப் செய்ய தொடங்கியிருக்கும் நிலையில், அமேசான் நிறுவனம் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் கூட்டமைப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க அமேசான் இந்தியாவுக்கு மத்திய அரசு சம்மன் விடுத்துள்ளது.
உலகளாவிய நாடுகளில் Recession எனும் உலகளாவில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பெரிய பெரிய நிறுவனங்கள் கூடும் பொருளாதார இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளன. இதையடுத்து பல முன்னணி நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்து வருகிறது.
அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் நிறுவனங்களும் லே ஆஃப் எனப்படும் பணி நீக்க நடவடிக்கையை அடுத்தடுத்து எடுத்து வருவது, அந்த துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

13 சதவீதம் ஆட்குறைப்பு நடவடிக்கை
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் போனதும் முதல் நடவடிக்கையாக எலான் மஸ்க் 50 சதவீதம் பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் அமைப்பான மெடாவும் 13 சதவீதம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. இதனால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம்
கூகுள் நிறுவனத்தின் சரியாக பணியாற்றாத ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை நீக்க பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அமேசான் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு எதிராக ஐடி நிறுவன ஊழியர்களின் கூட்டமைப்பான NITES மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் இது தொடர்பாக மனு அளித்து இருந்தது.

நேரில் ஆஜராகுமாறு சம்மன்
இந்த மனுவில், நெறிமுறைகளுக்கு மாறான மற்றும் சட்டவிரோதமாக அமேசான் ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், அமேசான் இந்தியாவிற்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் விடுத்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நல அமைச்சகம் விடுத்துள்ள சம்மனில், சட்ட விரோதமான பணி நீக்க புகார்கள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பெங்களூருவில் உள்ள துணை தலைமை தொழிலார் ஆணையர் முன்பாக ஆதிகாரப்பூர்வ பிரநிதி நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத நோட்டீஸ் பிரீயட் கொடுக்காமலும்
NITES அமைப்பின் தலைவர் ஹர்பிரித் சிங் சலுஜா கூறுகையில், "அமேசான் இந்தியா தொடங்கியிருக்கும் சட்ட விரோதமான பணி நீக்க நடவடிக்கையை NITES வன்மையாக கண்டிக்கிறது. அமேசான் கொள்கைகளை விட இந்த நாட்டின் சட்டம் தான் உயர்ந்தது. தொழிலாளர் சட்ட விதிகளின் படி, அரசின் அனுமதியின்றி எந்த ஒரு பணியாளரையும் லே ஆஃப் செய்ய முடியாது. ஒருவருடத்திற்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 மாத நோட்டீஸ் பிரீயட் கொடுக்காமலும் அரசிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது" என்றுதெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில்..
அமேசான் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 3 சதவீதம் பேர் அதாவது 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது. மந்த நிலை அச்சத்தால் இந்த முடிவை ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டும் பிசினஸ் சூழலுக்கு ஏற்பட ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று அமேசான் நிறுவன சி இ ஓ ஆண்டி ஜஸ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications