வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி உங்க மனைவி சொன்னா மறுக்காம மளிகைக் கடைக்கு உடனே போய்டுங்க.. "ஜாக்பாட்" அடித்தாலும் அடிக்கும்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இனிமேல் மனைவி உங்களை மளிகைக் கடைக்கு போக சொன்னால் சலித்துக் கொள்ளாதீர்கள். காரணம் தெரிந்தால் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டீர்கள்.

பொதுவாக சில ஆண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் , அவ்வப்போது மளிகைக் கடைக்கு மனைவி தம்மை அனுப்புவதுதான். அதிலும் காலையில் எழுந்தவுடன் பால் பாக்கெட், காய்கறிகளை வாங்க எழுப்பினால் போதும்! புலம்பலாக இருக்கும்!

இதுகுறித்து ஆண்களிடம் கேட்டால், நைட்தாங்க போய் காய் வாங்கிட்டு வந்தேன், இப்ப போய் கொத்தமல்லி வேண்டும், உப்பு வேண்டும் என சொன்னால் கோபம் வருமா வராதா என கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே என பெண்களிடம் கேட்டால் வேண்டுமென்றேவா ரெண்டு முறை கடைக்கு அனுப்புறோம், எல்லாம் இவரை கட்டின பிறகு ஏற்பட்ட ஞாபக மறதிதான் என்கிறார்கள்.

 ரிட்டையராகும் காவி! 2 பேரும் சரிப்பட்டு வர மாட்டாங்க! கட்டம் கட்டிய ரிட்டையராகும் காவி! 2 பேரும் சரிப்பட்டு வர மாட்டாங்க! கட்டம் கட்டிய

அமெரிக்கா

அமெரிக்கா

சரி விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் பிரஸ்டன் மகி (46). இவர் மார்கியூட்டில் வசித்து வருகிறார். இவர் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வீட்டுக்கு வரும் போது மனைவியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் வரும் போது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வருமாறு கூறியிருந்தார்.

பிரெஸ்டன்

பிரெஸ்டன்

எப்போதுமே சலித்துக் கொள்ளும் பிரெஸ்டன், அன்றைய தினம் கேட்டதுமே ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து அவர் மார்கியூட்டில் உள்ள மெய்ஜர் குரோசரி கடைக்கு சென்றார். பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு பில்லிங் போடும் போது அங்கு லாட்டரி குறித்த ஒரு அறிவிப்பை பார்த்தார். உடனே மனம் சஞ்சலப்பட்டது.

2 லட்சம் டாலர்

2 லட்சம் டாலர்

பொதுவாக 2 லட்சம் டாலருக்கு மேல் பரிசு இருந்தால் மட்டுமே லாட்டரியை வாங்குவாராம் பிரெஸ்டன். ஆனால் அன்றைய தினம் 1.90 லட்சம் டாலர் ஜாக்பாட் என இருந்ததாம். நமது கொள்கைக்கு நெருக்கமான நம்பர் தானே, அதாவது 10 லட்சம் டாலர்தானே குறைவு சரி ஒரு 5 டிக்கெட்டுகை வாங்கி போடுவோம் என நினைத்தார்.

5 டிக்கெட்டுகள்

5 டிக்கெட்டுகள்

அவர் வாங்கிய டிக்கெட்டுகளின் எண்- 05-12- 16-17- 29 ஆகும். பின்னர் மளிகை பொருட்களுக்கும் பில் போட்டுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் காலையில் கிச்சனில் இருந்த வாறே லாட்டரி மொபைல் ஆப் மூலம் தான் பெற்ற லாட்டரி சீட்டுகளை ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவருக்கு 1.90 லட்சம் டாலர் பரிசு விழுந்தது. இதை பிரெஸ்டன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

துள்ளி குதித்த பிரெஸ்டன்

துள்ளி குதித்த பிரெஸ்டன்

இது கனவா இல்லை நனவா என்றபடியே தன் கைகளை கிள்ளி பார்த்த பிரெஸ்டன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இந்த பணத்தை அவரது தொழிலில் முதலீடு செய்ய போகிறாராம். மிச்சமுள்ள பணத்தை குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்க போகிறாராம். மளிகை கடைக்கு வந்தவருக்கு பாருங்கள் எப்படி லாட்டரியில் பணம் அடித்துள்ளது! இதே போல் 2018ஆம் ஆண்டு முட்டை கோஸ் வாங்க கடைக்கு சென்ற பெண்ணுக்கு லாட்டரியில் 2.25 லட்ச டாலர்கள் ஜாக்பாட் அடித்தது.

English summary
Amercian man who had gone to grocery store won lottery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X